Karuppu: திட்டமிட்டபடி ‘கருப்பு’ படம் நாளை ரிலீஸாகுமா? பல தியேட்டர்களில் படம் போடலையா.. என்ன ஆச்சு?

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா ந நடித்துள்ள கருப்பு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல தியேட்டர்களில் படத்தை எடுத்துவிட்டதாக செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு படத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்புக் காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியது. மே 14ந் தேதி மற்றும் மே 15ந் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்புக் காட்சிகள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் வரை திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

Karuppu R J Balaji suriya

படம் வெளியாவதில் சிக்கல்: இதனால், படத்தின் முன்பதிவு பல தியேட்டர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் டிக்கெட் புக்கிங் செய்து வந்த நிலையில், தற்போது சில திரையரங்குகளில் இருந்து கருப்பு திரைப்படத்தின் ஷோக்கள் திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். படத்தின் வெளியீடு தொடர்பாக விநியோக தரப்பிலும், திரையரங்கு தரப்பிலும் ஏற்பட்ட பிரச்சினையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகுமா? அல்லது ரிலீஸ் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிருப்தியில் ரசிகர்கள்: இதனால் அதிருப்தி அடைந்த சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் மீம்சை பதிவிட்டு வருகின்றனர். லீவ் போட்டு கருப்பு படத்திற்கு டிக்கெட் புக் பண்ணோம் ஆனால், படத்தை தூக்கி இருக்கிறார்கள் பிரச்சனை சீக்கிரம் சரி செய்யுங்கள் என மீம்ஸ் போட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். கருப்பு படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'கருப்பு' திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது படம் பிரச்சனையில் சிக்கி உள்ளது சூர்யாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X