நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ.. அட்டகாச வீடியோவை வெளியிட்டு சூர்யா நெகிழ்ச்சி!

சென்னை: சின்னக் கலைவாணர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

அதன் புரமோஷன் வீடியோவை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மிர்ச்சி சிவா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் விவேக்குடன் இணைந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகின்றனர்.

திடீர் மறைவு

திடீர் மறைவு

நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்தி வந்த நடிகர் விவேக் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. எத்தனையோ மக்களின் சிரிப்புக்கு மட்டுமே காரணமாக இருந்த விவேக் முதன்முறையாக பல கோடி தமிழர்களின் கண்ணீருக்கு காரணமானார்.

கடைசி ஷோ

கடைசி ஷோ

மீண்டும் திரையில் நடிகர் விவேக்கின் புதிய காமெடியை பார்க்க முடியாதா என ஏங்கிய ரசிகர்களின் ஏக்கத்தை போக்க அமேசான் பிரைமில் LOL எனும் புதிய காமெடி ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதுதான் நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோவாகவும் மாறி விட்டது.

சூர்யா ட்வீட்

சூர்யா ட்வீட்

அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தொடர்ந்து தனது படங்களை வெளியிட்டு வரும் நடிகர் சூர்யா, நடிகர் விவேக்கின் காமெடி நிகழ்ச்சி தொடர்பான புரமோஷன் வீடியோவையும் தற்போது ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். நடிகர் விவேக் எப்போதுமே ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இருக்கிறார்.

செம கெத்தாக

செம கெத்தாக

நடிகர் விவேக் கோட் சூட் அணிந்து செம கெத்தாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி இருந்தார். அந்த கோட் சூட் கெட்டப்பே இந்த LOL காமெடி நிகழ்ச்சிக்குத் தான் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அகில உலக சூப்பர்ஸ்டார்

அகில உலக சூப்பர்ஸ்டார்

சின்னக் கலைவாணர் உடன் அகில உலக சூப்பர்ஸ்டாரான மிர்ச்சி சிவாவும் இந்த காமெடி ஷோவில் வேற லெவல் காமெடி கலாட்டா பண்ணி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் விவேக்குடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

விவேக் சாரை பார்த்து வளர்ந்தேன்

விவேக் சாரை பார்த்து வளர்ந்தேன்

மறைந்த மக்கள் கலைஞர் விவேக்கிற்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக இந்த புரமோ அமைந்திருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி ஏகப்பட்ட தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக கலக்கி வரும் புகழ், "நானெல்லாம் விவேக் சாரோட நடிப்பை பார்த்துத் தான் வளர்ந்தேன்.. இன்னைக்கு அவரையே பார்ப்பேன்னு நினைச்சே பார்க்கல" என பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

காமிக்ஸ்தான்

காமிக்ஸ்தான்

புதிய படங்கள், வெப் தொடர்கள் மட்டுமின்றி அமேசான் பிரைமில் ஏகப்பட்ட காமெடி நிகழ்ச்சிகளும் தயாராகி வெளியாகி வருகின்றன. முன்னதாக வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த LOL காமெடி ஷோவும் ரசிகர்களை சிரிக்க வைப்பது நிச்சயம்.

சூர்யா ரசிகர்கள்

சூர்யா ரசிகர்கள்

நடிகர் சூர்யா ட்வீட் போட்ட நிலையில், ஏகப்பட்ட சூர்யா ரசிகர்கள் சிங்கம் படத்தில் சூர்யாவுடன் விவேக் நடித்த காமெடி காட்சிகளை ஷேர் செய்து நடிகர் விவேக்கை நினைத்து வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் பட அப்டேட்டையும் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X