என் ரத்தமும் உன் ரத்தமும் வேறு வேறா.. கங்குவா இசை வெளியீட்டு விழாவில் அட்டகாசமாக பேசிய சூர்யா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்கவா' படத்தின் இசை வெளியீட்டு நேற்று விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, சிவகுமார், பாபி தியோல், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, போஸ் வெங்கட், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த இசைவெளியீட்டு விழாவில் காணொலியில் பேசிய ரஜினிகாந்த், 'கங்குவா' எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்று பேசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து பலர் பேசிய நிலையில்,கங்குவா படத்தின் நாயகன் சூர்யா பேசினார். அதில், நான் இருப்பது , மூச்சு விடுவது எல்லாமே இந்த அன்பான ரசிகர்களால் தான். பல ஊர்களில் இருந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாட வந்திருக்கிறீர்கள். அதைப்பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. " என் ரத்தமும் உன் ரத்தமும் வேறு வேறா" என்று பேசினார் சூர்யா. இந்த 27 வருடம் இன்னும் என்னால் உங்களுடைய அன்பை சம்பாதிக்க முடிகிறது என்றால் அது என்னுடைய இயக்குநர்கள் மற்றும் என்னுடைய தயாரிப்பாளர்களால் தான் முடிந்தது அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சூர்யா பேச்சு: இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 170 நாள் எப்படி போச்சுனு எங்களுக்கு தெரியல. தினமும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த படம் ஒரு பெரிய தல வாழை இலை விருந்து. சிவா உடன் பயணித்ததில் இருந்து எனக்கு இரண்டு முக்கியமான படம் கிடைத்தது. அதைதான் நாம் எல்லாரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். என்ன நடந்தாலும் நல்லதே நடக்கும் என்று சிவா என்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த எண்ணம் தான் இவ்ளோ பெரிய படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது.
பெண்களுக்கு நன்றி: இந்த படத்தில் நாங்கள் 3000 பேர் வேலை செய்திருக்கிறோம். நாங்கள் வேலையில் இருந்த போது,வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக்கொண்ட பெண்களுக்கு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறேன். உங்களின் சப்போர்ட் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது, அனைவரும் ஒன்று சேர்ந்து தான் இந்த தேரை இழுத்து இருக்கிறோம். ஆனால், உங்களின் தியாகம் இல்லாமல் உங்களின துணை இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. இந்த நேரத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்படுத்து இருக்கிறேன்.
அம்மாவின் அன்பை போல: நான் சினிமாவிற்கு வந்து 27 வருஷம் ஆகிவிட்டது, நிறைய மேடு,பள்ளத்தை பார்த்து இருக்கிறேன். சூரியன் மேலையே இருந்து இருந்தால், ஒரு புதிய நாள், ஒரு புதிய விடியல் கிடைத்து இருக்காது, அப்படித்தான் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மேடு பள்ளத்தை பார்க்கிறேன். நான் வெற்றிப்படத்தை கொடுத்தாலும் தோல்வி படத்தை கொடுத்தாலும், அம்மாவின் அன்பை போல, ரசிகர்களாகி உங்களின் அன்பு மாறவே இல்லை. மேலும்,மேலும் உங்களின் அன்பு அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. உங்களின் அன்பு விலை மதிப்பு இல்லாதது. உங்கள் அனைவரும் அன்புக்கும் சேர்ந்தமாதிரியான படமாக கங்குவா படம் இருக்கும். அன்பாகவே இருப்போம் அன்பையே விதைப்போம் என்று இசைவெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.


Click it and Unblock the Notifications











