Retro: சந்தோஷமோ சோகமோ அவரு பாட்டு இல்லாம இருக்காது..சூர்யா பேச்சு!

சென்னை: பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா, பேட்ட , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இதில், பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், காதல், எமோஷனல் கலந்த 1990களில் நடக்கும் கதையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய நிறுவனத்தின் படங்களுக்கு இசையமைப்பது சந்தோஷ் நாராயணன் அவர்கள் தான். எனக்கும் அவருக்கும் அப்படி ஒரு உறவு முறை இருக்கிறது. நான் சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் என் கூடவே அவருடைய பாடல் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தினுடைய பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது அதற்கு காரணம் ரசிகர்கள் ஆகிய நீங்கள் மட்டும்தான்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சூர்யா, இந்த படம் ஆரம்பிப்பதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது கார்த்திக் மற்றும் ராஜா தான். இந்த படத்திற்காக முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் இரண்டு பேரும் எடுத்துக்கிட்ட சிரமம் மிகப்பெரியது. அந்தமானில் படப்பிடிப்பு நடந்த போது ஆயிரம் பேர் அந்தமான் வந்தார்கள். கபோடில் இருந்து அனைத்து பொருட்களும் இங்கிருந்து தான் அந்தமான் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு தான் செய்தார்கள்.

Retro karthik subbaraj Suriya

நடிகர் சூர்யா: கார்த்திக் சுப்புராஜ் சார், உங்களின் முதல் படத்திலிருந்து கதைகள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடன் சேர்ந்து பயணிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு நடந்த 84 நாட்களும் ஒவ்வொரு நாளும். படப்பிடிப்பின் போது ஏதோ ஒரு விஷயத்தை நான் கற்றுக் கொண்டுதான் இருந்தேன். இந்த மேடையில் 15 உதவி இயக்குனர்களை பார்த்தேன். அவர்கள் ஒவ்வொரும் நாளை ஒரு மிகப்பெரிய இயக்குனர்களாக வருவார்கள். இன்றைய தலைமுறையினருக்கு உங்களுடைய கதை நிச்சயம் பிடிக்கும்.

2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் லோகோவிற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் சார் தான். எங்கள் நிறுவனங்களின் படங்களுக்கு இசையமைப்பது சந்தோஷ நாராயணன் அவர்கள் தான். எனக்கும் அவருக்கும் அப்படி ஒரு உறவு முறை இருக்கிறது. நான் சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி என் கூடவே பயணிப்பத அவருடைய பாடல்கள் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தினுடைய பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது அதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் மட்டும்தான்.

Retro karthik subbaraj Suriya

உங்கள் அன்பு என்னை வாழவைக்கும்: தொடர்ந்து பேசிய சூர்யா, அண்மையில் 3000 பேருடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது என்னை தனிப்பட்ட முறைகள் சந்தித்து அனைவருமே அண்ணா நல்லா இருக்கீங்களா? என்று கேட்டார்கள். ஒவ்வொருவரின் அன்பு மட்டும் தான் என்னை இந்த இடத்திற்கு வர வைத்திருக்கிறது. நான் சினிமாவிற்கு வந்தது 25 வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால், என்னை பார்க்க வந்த அனைவரும் 20 வயது உடையவர்களாக தான் இருப்பீர்கள். உங்களிடமிருந்து அந்த அன்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்பொழுதுமே நான் நன்றாக இருப்பேன்.

வாழ்க்கை அழகானது: நான் பத்தாவது படிக்கும்போது அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்து கொண்டுதான் இருந்தேன். பொது தேர்வில் மட்டும் தான் பாஸ் ஆனேன். அதேபோலத்தான் 12 ஆம் வகுப்பிலும் தோல்வி அடைந்தேன். வாழ்க்கை எப்போதுமே அழகானது வாழ்க்கையை நம்புங்கள், வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் தான் வாய்ப்பு வரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டால், எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும்.

நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேசனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். அதை நான் தனி ஆளாக செய்யவில்லை நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள், தங்களை பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். இன்னும் பல பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நடிகர் சூர்யா இசைவெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X