Suriya - வாட்ச் திருடிய ரோலக்ஸ்.. சூர்யா இப்படியெல்லாமா செய்வாரு?.. வெளிவந்த ரகசியம்

சென்னை: Surya (சூர்யா) வெளிநாட்டில் கடை ஒன்றில் சூர்யா வாட்ச் திருடிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன ரோலக்ஸ் இப்படியெல்லாமா செய்வார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் ரொம்பவே விமர்சனங்களை சந்தித்தவர். ஒருவழியாக அனைத்தையும் கற்றுக்கொண்டு பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்தவர்கள் அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டனர். ஆக்‌ஷன், எமோஷன் என கலந்துகட்டி அந்தப் படத்தில் நடித்திருப்பார் சூர்யா.

Actor Suriya stole the watch in abroad

பிதாமகன்: நந்தா படம் எப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததோ அதேபோல் சூர்யா கேரியரில் மாற்றத்தை கொண்டு வந்த மற்றொரு படம் பிதாமகன். அந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தாலும் சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் ரசித்து சிரிக்க வைத்தது. பிதாமகன் மூலம்தான் சூர்யாவுக்குள் ஒரு நகைச்சுவை நடிகர் இருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.

கமர்ஷியல்: கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமின்றி கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார் சூர்யா. இதனால் அவரது கிராஃப் சீராக சென்றுகொண்டிருக்கிறது. சமீபகாலமாக சூர்யாவின் கதை தேர்வும் அட்டகாசமாக இருக்கிறது. மேலும் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்துவிட்டது. எனவே அடுத்தடுத்த கதைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்தார்.

Actor Suriya stole the watch in abroad

ஜெய் பீம்: சூர்யா நடித்ததிலேயே அவரது கேரியர் பெஸ்ட் என்று ஜெய் பீம் படத்தை சொல்லலாம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், ஒரு முன்னணி ஹீரோ இப்படி நடிப்பது ஆரோக்கியமான விஷயம் என சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சூர்யா 42: சூர்யா இப்போது தனது 42ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் உருவாகவிருக்கும் இப்படம்தான் அவரது கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயர் ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Actor Suriya stole the watch in abroad

வாட்ச் திருடிய ரோலக்ஸ்: இதற்கிடையே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து அதகளம் செய்திருந்தார் சூர்யா. இந்நிலையில் வெளிநாட்டில் சூர்யா வாட்ச் திருடிய சம்பவம் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது சூர்யாவின் தம்பி கார்த்தி வெளிநாட்டில் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக சூர்யா தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ஷாப்பிங் சென்றபோது ஒரு ஃப்ளோர் முழுக்க வாட்ச்கள் இருந்திருக்கின்றன.

வாட்ச்களின் விலை அதிகமாக இருந்ததால் ஒரு வாட்சை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாராம் சூர்யா. அறைக்கு வந்ததும் அதை கார்த்தியிடம் சூர்யா கூற; உடனடியாக கார்த்தி தனது தந்தை சிவக்குமாரிடம் சொல்லிவிட்டாராம். கடும் திட்டு விழுந்த பிறகு அடுத்த நாள் காலை மீண்டும் அதே கடைக்கு சென்ற சூர்யா யாருக்கும் தெரியாமல் வாட்ச் இருந்த இடத்தில் வைத்துவிட்டாராம். இதனை ஒரு மேடையில் சூர்யாவும், கார்த்தியும் பகிர்ந்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X