Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ணா படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் நீண்ட காலங்களாக சூட்டிங் துவங்கப்படாமல் உள்ள நிலையில், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் அவரே இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்க கமிட்டாகியிருந்தார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வெற்றிப்படங்களாகவும் மாறி வருகின்றன. அந்த வகையில் சூரரை போற்று, ஜெய்பீம், விக்ரம் படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட்டில் கர்ணா, வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் அவர் தன்னுடைய சூர்யா 43 படத்திற்காக இணைந்திருந்தார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியானது. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவிருந்தார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்திருந்தனர்.
தள்ளிபோன புறநானூறு சூட்டிங்: இந்தி எதிர்ப்பை மையமாக கொண்டு பீரியட் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிகமான நாட்கள் தேவைப்படுவதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் இணைந்து அறிவித்தனர். படத்தின் திரைக்கதைக்கு அதிக காலங்கள் எடுத்துக் கொள்வதாகவும் இரண்டு பாங்களாக எடுத்தால் மட்டுமே இந்தப் படம் சிறப்பாக அமையும் என்பதால் இந்தப் படம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது எழுதியுள்ள ஸ்கிரிப்ட்டை படமாக எடுத்தால் 3 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையுமா வெற்றிக்கூட்டணி?: இதனிடையே இந்தப்படத்தின் கதைக்களம் இந்தி எதிர்ப்புக்கு எதிராக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள நிலையில், தற்போது பாலிவுட்டில் கர்ணா என்ற படம் மூலம் சூர்யா என்ட்ரி கொடுக்கவுள்ளதும் இந்தப் படத்தின் சூட்டிங்கை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சூரரை போற்று படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணி, அந்தப் படத்திற்காக தேசிய விருதுகளையும் குவித்த நிலையில், புறநானூறு படத்தின் அறிவிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











