வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் சூர்யா!
சென்னை: நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளை உலுக்கியது. இதுவரை கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும், 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்,
10 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவும் பொது முடக்கத்தை அறிவித்தன.

திரைத்துறை நட்சத்திரங்கள்
கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் தொழில் அதிபர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர். கொரோனா வைரஸின் கோர நாக்குகளுக்கு கடந்த ஆண்டில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர்.

சூர்யாவுக்கு கொரோனா
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் கோலிவுட் நடிகர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பவில்லை
இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.
பாதுகாப்பும் கவனமும்..
அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்." என்று தெரிவித்துள்ளார்.
குணமடைய பிரார்த்தனை
நடிகர் சூர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சூர்யாவின் இந்த பதிவை பார்த்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜாக்கிரதையா இருங்க
சூர்யாவின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், இத படிச்சதும் கண் கலங்கிங்கிடிச்சி தலைவா பாத்து ஜாக்கிரதையா இருங்க என தெரிவித்துள்ளார்.

இறைவன் அருள் இருக்கும்
சூர்யா பதிவிட்டிருந்த டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், சீக்கிரமாகவே குணமாகிடுவீங்க அண்ணா கவலைப்படாதீங்க, இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











