வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல… புதிய நம்பிக்கை… முதல்வருக்கு சூர்யா நன்றி !
சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் பேசிய முக ஸ்டாலின் இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது. இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்றார்.

நலம் விசாரித்த முதல்வர்
விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அணிவித்தை பாசி மணி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். இதையடுத்து பேசிய அஸ்வினி, தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி கூறினார். விழா முடிந்ததும் அஸ்வினி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.

வெறும் பட்டா அல்ல
நடிகர் சூர்யா, 'மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.

உளமார்ந்த நன்றி
மேலும் எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

ஒருகோடி நிதி உதவி
ஜெய்பீம்' திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதலமைச்சர் முக ஸ்டாலிடம் ஒரு கோடி நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











