Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ணா படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவரது படங்களின் வரிசையில் அடுத்தடுத்து புறநானூறு மற்றும் வாடிவாசல் படங்களும் உள்ளன. அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் சூர்யா. தயாரிப்பிலும் ஒரு பக்கம் பிசியாக செயலாற்றி வருகிறார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் அவரது சூரரை போற்று ரீமேக் படம் உருவாகியுள்ளது விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது. படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா. தயாரிப்பாளர். நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் செயல்பட்டு வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக சிவா இயக்கத்தில் கங்குவா படம் சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகிவருகிறது. இந்தப் படம் சர்வதேச அளவில் பத்து மொழிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கங்குவா படம்: முன்னதாக கங்குவா படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீடு உள்ளிட்டவை குறித்த அப்டேட்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ணா படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படம் குறித்தும் சூர்யா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா: இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்த நிலையில் இந்த படத்திற்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படுவதாகவும் படம் சில மாதங்கள் கழித்து ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் சுதா கொங்கரா மற்றும் சூர்யா அறிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா இணைய உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் -காதல் கதைக்களம்: கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்று தந்துள்ள நிலையில் அடுத்ததாக சூர்யாவுடன் அவர் இணையுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் 44வது படமாக இந்த படம் உருவாக உள்ள நிலையில் சூர்யாவின் 43வது படமான புறநானூறு படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
சூர்யா மகிழ்ச்சி: இந்நிலையில் புதிய துவக்கம் என்றும் அனைவரது வாழ்த்துக்களும் தேவை என சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே கார்த்திக் சுப்புராஜூம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் காதல், காமெடி மற்றும் போர் என அவர் தன்னுடைய பதிவில் படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்துவரும் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தின்மூலம் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











