புனித் மறைவை ஏற்றுக்கொள்ள முடியல… நினைவிடத்தில் கண் கலங்கிய சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மாலையிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

Puneeth நினைவிடத்தில் கதறி அழுத Suriya | ஏத்துக்கவே முடியல

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

ராஜ்குமாரின் மகன் புனித்

ராஜ்குமாரின் மகன் புனித்

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவர் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் பிரேமதா கனிகே படத்தில் 6 மாத கைக்குழந்தையாக நடித்துள்ளார்.

ஹீரோவா

ஹீரோவா

2002ம் ஆண்டு கதாநாயகனாக அப்பு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இதுவரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியா யுவரத்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகர் ஆவார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட புனித், 29ந் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உடல் கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்கலங்கிய சூர்யா

கண்கலங்கிய சூர்யா

இந்நிலையில, நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மாலையிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழுதார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, தனது குடும்பத்திற்கும் ராஜ்குமார் குடும்பத்திற்கும் நல்ல உறவு இருப்பதாகவும், புனித் ராஜ்குமாரின் மரண செய்திக் கேட்டு தங்களது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும், அவர் செய்த ஏராளமான உதவிகளை நான் கேள்விபட்டுள்ளேன், அவரின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்று கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X