Suriya: கங்குவா 100 மடங்கு சிறப்பா வந்துருக்கு.. ரசிகர்களுக்கு Rolex அப்டேட் கொடுத்த சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது.

அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சூர்யாவின் கங்குவா படம் மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலும் களைகட்டியுள்ளது.

Actor Suriya updates about Kanguva and his next movies updates in his Fans meet

இந்நிலையில் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள் சென்னை என அடுத்தடுத்து ஷெட்யூல்களை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

கங்குவா மற்றும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் சொன்ன சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. நெருப்பின் மகன் என்று இந்த டைட்டிலுக்கு அர்த்தம் என்று தனது பேட்டியொன்றில் படத்தின் இயக்குநர் சிவா கூறியிருந்தார். அந்த அளவில் இந்த படத்தில் சூர்யாவின் இரண்டு கேரக்டர்களும் ஃபயராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கடந்த மாதத்தில் படத்தின் போஸ்டர், ப்ரமோ என அடுத்தடுத்து வெளியாகி மிரட்டலாக அமைந்தது.

இதுபோன்ற ஒரு ப்ரமோவை முன்னதாக வெளியான படங்களில் எந்தப்படமும் கொடுத்ததில்லை என்ற பாராட்டுக்களை இந்த ப்ரமோ குவித்தது. சிவா போன்ற ஒரு கமர்ஷியல் இயக்குநரிடம் இதுபோன்ற ஒரு படத்தையும் முன்னதாக அதற்கான மிரட்டலான ப்ரமோவையும் எதிர்பார்க்கவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்தன. முன்னதாக வெளியான டைட்டில் டீசரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் வரலாறு கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா43 படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்டோபர் மாதத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சூர்யா தற்போது பேசியுள்ளார். இன்றைய தினம் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Actor Suriya updates about Kanguva and his next movies updates in his Fans meet

சுதா கொங்கராவுடன் அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சூரரைப்போற்று படத்திற்கு பிறகு இணையவுள்ள இந்த கூட்டணியில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணையவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்து ரசிகர்களை மிரட்டிய ரோலக்ஸ் கேரக்டரை தனி படமாக எடுக்கவுள்ளதாகவும் இதற்காக லோகேஷ் தெரிவித்த கதை தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரும்புக்கை மாயாவி படத்திலும் சூர்யா அடுத்ததாக இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ள கங்குவா படம் சூட்டிங் துவங்குவதற்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பை காட்டிலும் 100 சதவிகிதம் சிறப்பாக வந்துள்ளதாகவும் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து அவ்வப்போது படக்குழுவினர் சிறப்பான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவும் மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X