சூர்யா ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! வாடிவாசல் சூட்டிங் டேட் எப்போனு தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் அண்மையில் வெளியாகின. இப்படியான நிலையில் வாடிவாசல் படத்தின் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட்டான திரைப்படம் தான் வாடிவாசல். இந்தப் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மற்றும் அதை ஒட்டிய வாழ்வியலை மையப்படுத்திய கதையாக அமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தில் சூர்யா, ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கும் வீரராக அதாவது மாடுபிடி வீரராக நடிக்கிறார். மாடுபிடி வீரராக நடிக்க உள்ள நடிகர் சூர்யா இதற்காக தமிழ்நாட்டின் தலை சிறந்த மாடுபிடி வீரர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்றார். அதே நேரத்தில் படத்தின் காட்சிகளுக்காக தானே தனது வீட்டில் சொந்தமாக ஒரு காளைமாடு வாங்கி வளர்த்தும் வருகிறார்.

ஜல்லிகட்டு மாடு வளர்க்கும் சூர்யா: 2020 ஆம் ஆண்டிலிருந்து அந்த மாட்டினை நேரடியாக சூர்யாவே வளர்த்து வருகிறார். மேலும் காளை மாடு ஜல்லிக்கட்டு காளை மாடுகளை போல் உருவம் பெற வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு காளை மாடுகளை வளர்த்து வருபவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்றும் சூர்யா அந்த காளை மாட்டை வளர்த்து வருகிறார். மேலும் அதன் கொம்புகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதிலும் படக்குழு தனி கவனம் செலுத்தி வந்துள்ளது. சூர்யா மாடுபிடிக்கும் வீடியோக்களை படக்குழு வெளியிட அது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் ஜல்லிகட்டு வீரர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கவனமாக இருந்த படக்குழு: அவ்வப்போது சூர்யா வீட்டுக்கு செல்லும் வெற்றிமாறன் காளை மாடு எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும் கவனித்து வந்துள்ளார். இதனடி சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான படமான பருத்திவீரன் படத்தின் பிரச்னை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியதால் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுமோ என்ற அச்சம் சூர்யா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மிக முக்கிய காரணம் பருத்தி வீரன் படத்தை இயக்கிய அமீர் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் என்பதுதான். இந்த பிரச்னையின் போது நடிகர் சூர்யாவும் வெற்றி மாறனும் சந்தித்து பலமணி நேரங்கள் பேசியுள்ளனர்.
புதிய அப்டேட்: இறுதியில் படத்தில் இருந்து இயக்குநர் அமீரும் வெளியேறவில்லை மற்றும் சூர்யாவும் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது அடுத்த இரண்டு மாதங்களில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் மொத்தப் பணிகளையும் முடித்துவிட்டு அதன் பின்னர் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல்தான் அது. அதாவது ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், சூர்யா நடிக்க இருந்த பான் இந்தியா திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











