சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ள பிரபல நடிகர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து நடிக்கவுள்ள பிரபல நடிகர் உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ள தகவலை கூறியுள்ளார். இதேபோல் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலையும் அதில் சூர்யா நடிக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. செல்வராகவன் இயக்கி நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் ஷுட்டிங் தொடங்கியது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
இதேபோல் நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிறுத்தை சிவாவின் படத்தில் இணைந்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











