'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Suriya Wishing Chief Minister Stalin | Stalin பதவி பிரமாணம் #TnCMStalin

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்டாலினுடன் திமுக அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், பாஜக மூத்த தலைவர் இல கணேசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என பலரும் பங்கேற்றனர்.

நடிகர் சூர்யா வாழ்த்து

நடிகர் சூர்யா வாழ்த்து

தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

முடித்தே தீருவோம்!

முடித்தே தீருவோம்!

'முடியுமா நம்மால்?' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்.. 'முடித்தே தீருவோம்!' என்பது வெற்றிக்கான தொடக்கம்.. - முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

மக்களின் முதல்வராக

மக்களின் முதல்வராக

'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 'மக்களின் முதல்வராக' பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

தமிழகம் வளர்ச்சியடையும்

தமிழகம் வளர்ச்சியடையும்

சுவாசிப்பதற்கு 'உயிர் காற்று' கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்து மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்த துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்,

ஒருமித்த குரலாக ஒலிக்கட்டும்

ஒருமித்த குரலாக ஒலிக்கட்டும்

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பொதுமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒரு மித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X