Actor Suriya: காயத்துடன் மும்பை புறப்பட்டு சென்ற சூர்யா.. எதுக்காக தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவர் சுதா கொங்கராவுடன் தனது சூர்யா43 படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டன.

Actor Suriya with his wife Jyothika starts his journey to Mumbai for rest

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து காரணமாக தற்போது சூர்யா ஓய்வில் உள்ளார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சிவா இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக நடந்துவந்த இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக அடுத்த ஆண்டின் கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த மாதத்துடன் சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாகவும் அவர் தொடர்ந்து சுதா கொங்கரா படத்தின் சூட்டிங்கில் அடுத்த மாதத்தில் இணையவுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டன.

சூர்யாவிற்கு விபத்து: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. கடந்த 23ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டைக்காட்சி தொடர்பான சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. சண்டைக் காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததையடுத்து காயமடைந்த சூர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Actor Suriya with his wife Jyothika starts his journey to Mumbai for rest

தள்ளிப்போன கங்குவா பட சூட்டிங்: இதனால் கங்குவா படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் நலமாக இருப்பதாகவும் சூர்யா சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஓய்வு பெறும்வகையில் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். உடன் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவும் சென்றுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சூர்யா மும்பை பயணம்: சென்னை விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அவர் விரைவில் மும்பையிலிருந்து சென்னை திரும்புவார் என்றும் கங்குவா படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கராவின் படத்தில் இணையவுள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தாமதமாவதால் அந்தப் படத்தின் சூட்டிங்கும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா: வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் கங்குவா படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். சர்வதேச அளவில் 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த பொருட்செலவில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X