Suirya birthday: சூர்யா பிறந்தநாள்.. மாஸாக களமிறங்கும் ரசிகர்கள்.. CDP வெளியீடு!
சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் கமிட்டாகி நடித்துவரும் சூர்யா நாளைய தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி அவரது படங்களின் அடுத்தடுத்த கொண்டாட்ட அப்டேட்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் ரசிகர்களும் இந்த பிறந்த நாளை மிகப் பெரிய கொண்டாட்டமாக்கி வருகின்றனர். சூர்யா பிறந்தநாளையொட்டி அவரது CDP தற்போது வெளியாகி உள்ளது. சூர்யாவின் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா நாளைய தினம் தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி அவரது நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா, சூர்யா 44 படங்களின் அப்டேட்கள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாட்டமாக இன்று நள்ளிரவு 12 மணியளவில் சூர்யா 44 அப்டேட் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை சூப்பர் கொண்டாட்டமாக மாற்ற அவரது ரசிகர்களும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குவா பட ரிலீஸ்: ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது CDP வெளியாகியுள்ளளது. இதில் கங்குவா பட கெட்டப்பை வெளிப்படுத்தும்வகையில் சூர்யா காணப்படுகிறார். கங்குவா படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் ரிலீசாகாத நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் அவரது கங்குவா படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகமும் அடுத்ததாக உருவாக உள்ளதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுடிலும் கர்ணா என்ற படத்தில் சூர்யா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யா பிறந்தநாள்: விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கு இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் காணப்படும்நிலையில் அவரது பிறந்தநாளை மிகப்பெரிய கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் அவரது படங்களின் அப்டேட்களும் கூடுதல் போனசாக அவர்களது உற்சாகத்தை பன்மடங்கு உயர்த்தவுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து சூர்யாவின் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
வேட்டையனுடன் மோதும் கங்குவா: கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் அன்றைய தினமே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யா -ரஜினிகாந்தின் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இதுகுறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











