300 கோடி கங்குவாவை விடுங்க.. 600 கோடி கர்ணன் ஏன் தாமதமாகுது தெரியுமா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்!
மும்பை: நடிகர் சூர்யா தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக வெளியான அவரது சூரரை போற்று, ஜெய் பீம் படங்கள் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் கமர்சியல் களத்தில் நடித்திருந்தார் சூர்யா.
இந்த படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆயினும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முதலுக்கே மோசமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது கங்குவா படம் கடந்த 14ம் தேதி ரிலீசாகியுள்ளது.. சர்வதேச அளவில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீசாகியுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த படம் அடுத்தடுத்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் வசூல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தையும் வம்பிழுத்தார்.
இதனிடையே, தற்போது படத்தின் விமர்சனங்கள் குறித்து சூர்யாவின் மனைவி ஜோதிகா பேசியுள்ளது மேலும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா பாலிவுட்டில் கமிட்டாகியுள்ள கர்ணா படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்க உள்ள நிலையில் படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் பட்ஜெட் காரணமாக தொடர்ந்து தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்குநர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் படத்தின் பட்ஜெட்டை ஓம்பிரகாஷ் குறைக்க வேண்டும் என்று தயாரிப்புத் தரப்பான எக்ஸல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கேட்டுள்ளது.
அப்படி இல்லையென்றால் இந்தப் படத்தை கைவிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்தில் இணையவுள்ள சூர்யா, கர்ணா படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சூர்யா கமிட்டாகி வருகிறார். கங்குவா படத்திற்காக அவர் 2 ஆண்டுகளுக்கும் மேல் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், அடுத்தடுத்த படங்களை துரிதப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











