Suriya: மீண்டும் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா.. ஜெய்பீம் ராசி சூர்யா 45 படத்திலும் கைக்கொடுக்குமா?
கோவை: நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கோவையில் நடந்துவருகிறது. படத்தில் நடிகை திரிஷா கடந்த இரு தினங்களுக்கு முன்பு இணைந்த நிலையில், அடுத்தடுத்த படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பை பட,ககுழுவினர் சமூக வலைதளப் பக்கங்களில் மேற்கொண்டனர்.
யோகிபாபு, நட்ராஜ், ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டவர்கள் படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்புத்தரப்பு அறிவித்துள்ளது. படத்தின் சூட்டிங் கோவையின் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இம்மாதத்திற்குள் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கோவையில் நடத்தி முடிக்கப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

சூர்யா 45 படம்: இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. கிராமத்து பின்னணியில் ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கோவையில் மாசாணியம்மன் கோயில் இம்மாதத்தின் முதல் வாரத்திலேயே பூஜையுடன் துவங்கியது. இதில் பாரம்பரிய லுக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
வழக்கறிஞராக சூர்யா: படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக கோவையில் நீதிமன்றத்தில் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் வரும் 18ம் தேதியுடன் இந்த முதல்கட்ட சூட்டிங்கை சூர்யா நிறைவு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் மற்றவர்களின் காட்சிகளை படக்குழுவினர் சூட் செய்யவுள்ளதாகவும் இத்துடன் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் வழக்கறிஞர் கேரக்டர்: முன்னதாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் படத்திலும் சூர்யா வழக்கறிஞராக நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்தப்படம் சூர்யா கேரியரில் சிறப்பாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் தனது சூர்யா 45 படத்திலும் வழக்கறிஞர் அவதாரம் எடுத்துள்ளார் சூர்யா. ஜெய்பீம் படத்தை போலவே இந்தப் படத்திலும் வழக்கறிஞராக இணைந்துள்ள நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











