மும்பையில் செட்டிலான சூர்யா.. ஆள் இல்லாத சென்னை வீட்டுக்கு 'ஓசி' பாதுகாப்பு!
சென்னை: கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் படிப்புக்காக மும்பையில் செட்டில் ஆகி உள்ள நிலையில், அவரின் சென்னை வீட்டுக்கு அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் எவர்கிரீன் ஜோடி என சூர்யா, ஜோதிகாவை சொல்லலாம். கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2006 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்தோடு சூர்யா, ஜோதிகா இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். சூர்யா, ஜோதிகா இருவரும் தங்களின் பிள்ளைகள் இருவரையும் ஊடக வெளிச்சம் எதுவும் இல்லாமல் வளர்த்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா: சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அன்றுபோல் இன்றும் இளமை மாறாமல் காதலுடன் மகிழ்ச்சியான கப்புள் போல இருவரும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி ஜோதிகா 36வயதிலே படத்தில் நடித்தார். தற்போது ஜோதிகா, தமிழ் சினிமா தாண்டி, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன் கணவர் சூர்யாவுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
அமைச்சர் சிபாரிசு: ஜோதிகா இந்தி சினிமாவில் பிஸியாக நடித்துத் வருவதால் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். மகன், மகள் படித்து வருவதால், அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை என்று சூர்யா தெரிவித்து இருந்தார். ஆனால், சூர்யாவின் சென்னை வீட்டில் ஆள் இல்லாததால், அமைச்சர் ஒருவரின் சிபாரின் பேரில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இணையத்தில் இந்த போட்டோக்கள் வெளியாகி தற்போது பேசுபொருளாகி உள்ளது.
கங்குவா: நடிகர் சூர்யா தற்போது, கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, நட்டி , பாபி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகிறது. இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 43-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











