வசூல் வேட்டையில் கங்குவா படம்.. 2 நாட்களின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு.. இவ்வளவு கோடிகள் வசூலா?
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் 11,500 திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகி உள்ளது.
படம் மிகப்பெரிய பிரமோஷன்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில்கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆயினும் படத்தின் வசூல் சாதனை படைத்து வருகிறது. அடுத்தடுத்த தினங்களின் வசூல் குறித்து ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகி உள்ளது. சர்வதேச அளவில் 11,500 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் சவுண்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொடுமைப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் கதையே இல்லை என்றும் ஒரு சாரார் தங்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
கங்குவா படம்: கங்குவா படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் முதல் நாளிலேயே 58 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் இரண்டு நாள் வசூல் சர்வதேச அளவில் 89,32 கோடிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டுநாள் வசூல்: இந்த படம் ஒரு வாரம்கூட திரையரங்குகளில் தாங்காது என்று முன்னதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் இது குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கங்குவா படம் பான் இந்தியா படமாக அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்து உள்ளதாகவும் சர்வதேச அளவிலும் இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இரட்டை கெட்டப்புகளில் சூர்யா: வித்தியாசமான படமாக கங்குவா படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த நாள் வசூலை ஸ்டூடியோ கிரீன் நிறுவணம் அறிவித்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தப் பட,ம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா இரட்டை கெட்டப்புகளில் அதிரடி காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











