Suriya: சென்னையில் துவங்கிய சூர்யா பட இறுதிக்கட்ட சூட்டிங்.. சம்மர் ரிலீசுக்கு தயாராகும் கங்குவா!
சென்னை: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா காம்பினேஷனில் உருவாகிவருகிறது கங்குவா படம். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் சென்னையில் படத்தின் சூட்டிங் நடைபெற்றது.

இந்த மாதத்துடன் கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தில் இணையவுள்ளார்.
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த மாஸ் சப்ஜெக்ட்களில் கவனம் செலுத்தி வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இயக்குநர் சிவாவுடன் கங்குவா படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப்படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.
வரலாற்றுக் கதைக்களம்: வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்த நிலையில் தொடர்ந்து தாய்லாந்திலும் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாகியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத், சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் படத்தின் பாடல்கள், பிஜிஎம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட சூட்டிங்: இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் இன்றைய தினம் சென்னையில் துவங்கியுள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இதில் சூர்யா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஷெட்யூலுடன் சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும் என்றும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதி வரை இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சூர்யா43 படத்தில் இணையும் சூர்யா: இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்த மாதத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 43 படத்தின் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளார். சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவு செய்யப்பட்டாலும் படத்தின் பேட்ச் வேலைகள் சில மீதமுள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் அது நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் அப்டேட்: ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் மிகவும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்று சமீபத்தில் ஜப்பான் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா தெரிவித்திருந்தார். சமீப காலங்களில் வரலாற்று மற்றும் பீரியட் படங்களில் அடுத்தடுத்த படக்குழுவினர் ஆர்வம் காட்டிவரும் நிலையில் கங்குவா படமும் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











