Actor Suriya: போட்றா வெடிய.. சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா படத்தின் நெருப்பு பாடல்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளது. சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா படம் சூர்யா கேரியரில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. சூர்யாவின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி, பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சூர்யா பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: வரும் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று முன்னதாகவே கணிக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. கங்குவா படத்தின் நெருப்புப் பாடல் வரும் 23ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் அவரது படங்களின் அடுத்தடுத்த அறிவிப்புகள், கொண்டாட்டங்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது கங்குவா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நெருப்பு பாடல்: கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம் என்று முன்னதாக படத்தின் இயக்குநர் சிவா கூறியிருந்த நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நெருப்பு பாடலாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடல் குறித்த அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவன வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவை சூர்யாவும் ரீ-போஸ்ட் செய்துள்ளார். சூர்யாவின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கங்குவா படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்: சூர்யா பிறந்தநாளையொட்டி வரும் ஜூலை 23ம் தேதி சூர்யா 44 படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் நிலையில் ரொமான்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு சிறை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் கூறப்பட்டுள்ளது. இதுவும் ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











