Kanguva: துவங்கியது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்.. தாய்லாந்து போன சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசானவண்ணம் உள்ளன. அடுத்ததாக அவரது நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகிறது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் கங்குவா படத்தில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.

 Actor Suriyas Kanguva movie last schedule begins in Thailand

தாய்லாந்தில் துவங்கிய கங்குவா படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்து படங்களை கொடுத்து வெற்றிப் பெற செய்துள்ளார் சூர்யா. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங், கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள், சென்னை போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை சொல்லும் கதைக்களத்தை சிவா கையில் எடுத்துள்ளார். 1500 வருடங்களுக்கு முந்தைய காலத்தை சொல்லும் ஒரு கதைக்களத்தையும் தற்போதைய காலகட்டத்தை சொல்லும் ஒரு போர்ஷனையும் சிவா எடுத்து முடித்துள்ளார். கோவாவில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போதைய காலகட்டத்தை எடுத்து முடித்துள்ளார். இதில் கதையின் நாயகி திஷா பதானி இணைந்திருந்தார். சூர்யா -திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது.

படத்தின் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவான பாடல் காட்சியில்தான் சூர்யா -திஷா பதானி இணைந்து நடித்திருந்தனர். சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யா -தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். தொடர்ந்து கமர்ஷியல் படங்களை கொடுத்துவந்த சிவா, இந்தப் படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துள்ளார். அவரது இந்த முயற்சியும் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

கோவா, கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்த மற்றும் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக தற்போது சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சூட்டிங் இம்மாத இறுதிவரை நடக்கும் என்று படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படத்தின் வரலாற்று போர்ஷன்கள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தின் இந்த ஷெட்யூலை நிறைவு செய்துவிட்டு சுதா கொங்கராவுடனான தன்னுடைய அடுத்தப் படத்தின் சூட்டிங்கில் நவம்பர் மாதத்திலிருந்து சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் சில நடிகர்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்த வெளியான நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனிடையே கங்குவா படத்தின் பேட்ச் வேலைகளும் ஒருபுறத்தில் விறுவிறுப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X