பிரம்மாண்டமான கங்குவா முதலை ஃபைட் சீன்.. அதுக்கு பின்னாடி இவ்வளவு உழைப்பா.. மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது கங்குவா படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை இயக்குநர் சிவா உருவாக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கங்குவா படம்தான் இரண்டரை ஆண்டுகளை கடந்து சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் படத்தின் இசை மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது.

suriya kanguva movie siva

கங்குவா படம்: நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14ம் தேதி கங்குவா படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசான நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்காக அதிகப்படியான மெனக்கெடல்களை படக்குழுவினர் போட்டிருந்த நிலையில் படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. படத்தில் பல லாஜிக் மீறல்கள் காணப்படுவதாகவும் திரைக்கதையிலும் காட்சி அமைப்பிலும் சிவா இன்னும் சிறப்பான கவனத்தை கொடுத்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முதலை ஃபைட் சீன்: இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாகவே கொடுத்திருந்தார் சிவா. குறிப்பாக படத்தில் முதலை ஃபைட் சீன் மிகச்சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் சில நிமிடங்கள் வரும் இந்த சண்டைக்காட்சிக்காக தொடர்ந்து படக்குழுவினர் 40 நாட்கள் உழைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மேக்கிங் வீடியோ தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த காட்சிக்காக சிவா உள்ளிட்ட படக்குழுவினரின் மெனக்கெடல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக முதலை தொடர்பான பல ஆவணப்படங்களை பார்த்து ஸ்டடி செய்ததாக சிவா கூறியுள்ளார்.

மேக்கிங் வீடியோ: சண்டையின்போது முதலையின் பாடி லேங்குவேஜ் மற்றும் அதன் ரியாக்ஷன் போன்றவற்றையும் தாங்கள் மனதில் வைத்து இந்தக் காட்சியை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக 17 அடி நீளத்தில் அதன் மாடலை செய்ததாகவும் அதை தண்ணீரில் விட்டால் அது உள்ளே சென்றுவிட்டதால் தெர்மகோல் போன்றவற்றின் உதவியுடன் அதை தண்ணீரில் செட் செய்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த காட்சியின் டீடெயிலிங்கிற்காக பலதரப்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சிவா கூறியுள்ளார். இதன் முதலை மாடலை செய்யும் வேலைகளையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

அடுத்தடுத்த படங்கள்: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் கடந்த 14ம் தேதி மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்திற்கு முன்னதாக அதிகமான பிரமோஷன்களும் செய்யப்பட்டன. இருந்தபோதிலும் படம் சர்வதேச அளவில் சொதப்பலான வசூலையே பெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் சூர்யா. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடாந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X