Kanguva movie: போட்றா சரவெடிய.. கங்குவா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு. உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன.
ஒரு கட்டத்தில் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். படத்தில் சூர்யா பத்து வித்யாசமான கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் ஓடிடியில் 20 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கங்குவா படம்: சூர்யா -சிவா காம்பினேஷனில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது கங்குவா படம். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா மிரட்டலான பத்து கேரக்டர்களில் நடித்துள்ளார். சர்வதேச அளவில் 10 மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்த நிலையில் படத்தின் குவாலிட்டியில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக உள்ளதாக கூறப்பட்டது. இதுவே ரிலீஸ் தாமதத்திற்கு காரணம்
ரிலீசுக்கு தயார்: இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் உள்ளிட்டவை அதிகமான காலகட்டத்தை எடுத்துக் கொண்ட நிலையில் படம் தற்போது ஏறக்குறைய ரிலீசுக்கு தயாராகியுள்ளது.. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள கங்குவா படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகர்கள் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் அறிவிப்பின்போதே படத்தின் டைட்டில் பிரமோவும் வெளியாகி சிறப்பான கவனத்தை ஈர்த்திருந்தது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். சரியானநேரத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக தயாரிக்க வேண்டும் என்பது போன்ற போஸ்டர்களையும் ரசிகர்கள் பொதுவெளியில் ஒட்டி இருந்ததை பார்க்க முடிந்தது. இதற்கு மேல் விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்த படக்குழுவினர் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்: சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். முன்னதாக படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சூர்யா கோயரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த பட,ம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலும் களைகட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மாஸ் லுக்கில் சூர்யா: இந்த படத்தில் நீண்ட தலைமுடி உள்ளிட்டவற்றுடன் இளவரசனுக்கான லுக்கில் சூர்யா காணப்படுகிறார். இதுபோன்ற பத்து வித்தியாசமான கெட்டப்புகளில் அவர் படத்தில் தோன்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கமர்சியல் படங்களை மட்டுமே கொடுத்து வந்த இயக்குனர் சிவா, இந்த படத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸை கொடுக்க மிக அதிக அளவில் மெனக்கெட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











