Kanguva: வேட்டையன் படத்தோட மோத போறது இல்லையா?.. சூர்யாவோட கங்குவா படம் இந்த தேதியில் ரிலீஸா?

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா. கமர்சியல் படங்களை கொடுத்து வந்த சிவா இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கங்குவா படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 10ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த ரேசிலிருந்து தங்குவா படம் பின்வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

suriya kanguva movie tamil cinema

கங்குவா படம்: நடிகர் சூர்யா -இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படம் தொடர்ந்து அடுத்தடுத்த ரிலீஸ் தேதிகளுக்காக தவித்து வந்த நிலையில் ல் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அன்றைய தினம் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கங்குவா -வேட்டையன் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஆச்சர்யம் தெரிவித்து வந்தனர்.

தயாரிப்பாளர்கள் கணிப்பு: தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே கட்டமாக தற்காலங்களில் படங்களை ரிலீஸ் செய்யவே பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் சில தினங்களில் படத்தின் வசூலை தாறுமாறாக உயர்த்த முடியும். அனைத்து தரப்புரசிகர்களையும் ஒரே படத்தை பார்க்க வைப்பதன் மூலம் இந்த வசூல் சாதனை சாத்தியப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்காலங்களில் அதிகமான பொருட்செலவில் படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில் இவ்வாறு தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே சில தினங்களில் அசலையும் தொடர்ந்து லாபத்தையும் பார்க்க முடியும் என்ற கணிப்பை தனஞ்செயன் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பாளர்களும் முன்னதாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ரேஸில் பின்வாங்கிய கங்குவா?: இந்நிலையில் வேட்டையன் மற்றும் தங்குவா இரண்டு படங்களும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. இதிலிருந்து ஒரு படம் பின்வாங்குவது சரியாக இருக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில் இந்த முடிவை கங்குவா படம் எடுத்துள்ளது. அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து பின்வாங்கி, நவம்பர் 15ம் தேதி கங்குவா படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவிலேயே தங்குவா டீம் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று பின்னணியில் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தங்குவா படத்தின் சூட்டிங் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ம் தேதி ரிலீஸ்?: இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதே சிறப்பாக இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த படம் அக்டோபர் 10ம் தேதி இல்லாமல் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X