April 2024 release: சூர்யாவுடன் மோதும் கமல்ஹாசன்.. ஏப்ரலுக்கு திட்டமிடும் கங்குவா -இந்தியன் 2?

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதத்துடன் படத்தின் சூட்டிங்கை சூர்யா நிறைவு செய்யவுள்ளார்.

இந்தப் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் மாதத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது. இதனிடையே இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் படமும் ஏப்ரல் மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.

Actor Suriyas Kanguva and Kamals Indian 2 movies plans for the same day release

சூர்யாவின் கங்குவா: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தாய்லாந்திலும் பிளாஷ்பேக் காட்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை ஈவிபியில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த சூட்டிங்கை இந்த மாத இறுதிக்குள் சூர்யா முடிக்கவுள்ளார். தொடர்ந்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் டிசம்பருக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன.

விரைவில் நிறைவடையும் சூட்டிங்: தொடர்ந்து படத்தின் சிஜி வேலைகளையும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் துரிதப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று ஜப்பான் பட இசை வெளியீட்டில் பங்கேற்ற சூர்யா உற்சாகம் தெரிவித்திருந்தார். இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தின் சூட்டிங்கில் இணைய திட்டமிட்டுள்ளார்.

கோடைக் கொண்டாட்ட ரிலீஸ்: இதனிடையே இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்ஜான், தமிழ் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறைகள் வரும் நிலையில் இந்தப் படத்தை அந்த நேரத்தில் வெளியிடுவது சிறப்பாக அமையும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமர்ஷியல் இயக்குநராக தன்னை இதுவரை வெளிப்படுத்திவந்த சிவா இந்தப் படத்தில் வரலாற்று போர்ஷனை எப்படி இயக்கியுள்ளார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏப்ரல் ரிலீசுக்கு திட்டமிடும் இந்தியன் 2: இதனிடையே கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் இதே நாளில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ், சிஜி வேலைகள் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கங்குவா மற்றும் இந்தியன் 2 படங்கள் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரே நேரத்தில் ரிலீஸ்: இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசானால் போட்டி பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டில் சூர்யா, கமல் இருவருக்கும் எந்தப் படமும் ரிலீசாகாத நிலையில், அடுத்த ஆண்டில் வெளியாகும் இந்தப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. படங்களுக்கு ரசிகர்கள் எத்தகைய வரவேற்பை கொடுப்பார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X