Suriya follows Ajith: அஜித் வழியை பின்பற்றும் சூர்யா.. கங்குவா பட ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளதாகவும் சூர்யா தொடர்பான காட்சிகள் இந்த மாதத்திற்குள் எடுத்து முடிக்கப்படும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actor Suriyas Kanguva movie to be released on April 11 of next year it seems

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தில் இணையவுள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை தன்னுடைய ரகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்து வருகிறார். இவரது கதைத்தேர்வு சிறப்பாக அமைந்து வருகிறது. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஒரே நேரத்தில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் படக்குழுவினர் சூட்டிங்கை மேற்கொண்டனர்.

விறுவிறுப்பான சூட்டிங்: முன்னதாக கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் அடுத்த மாதத்திற்கு நிறைவடைந்துவிடும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்குள் சூர்யா தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதா கொங்கராவுடன் கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்தில் அடுத்த மாதத்தில் சூர்யா இணையவுள்ளார். இந்தப் படம் சூர்யாவின் 43வது படமாக உருவாகவுள்ளது. முன்னதாக சூரரைப் போற்று படத்தில் சூர்யா -சுதா கொங்கரா இணைந்திருந்தனர். இந்தப் படம் ஓடிடியில் வெளியான போதிலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. மேலும் தேசிய விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட உள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.

கல்லூரி மாணவராக சூர்யா: இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னுடைய பிட்னசை அவர் சிறப்பாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பு மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை ரிலீஸ்: வழக்கமாக கோலிவுட்டில் புதிய படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீசாகும் நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய படங்களின் ரிலீசை வியாழக்கிழமைகளில் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இந்த வியாழக்கிழமை சென்டிமெண்ட் சிறப்பாக வொர்க் அவுட் ஆகிவரும் சூழலில் சமீபத்தில் முன்னணி நடிகர்களும் இந்த பாணியை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அஜித் வழியில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய படத்தை வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X