Kanguva: என்னது 2000 கோடியா.. அடுத்த வெள்ளிவரை ஓடினாலே பெரிய விஷயம்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள கங்குவா படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நேற்றைய தினம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 11,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய மன உளைச்சலை படம் பார்த்த ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

suriya kanguva movie gnanavel raja


கங்குவா படம்: சர்வதேச அளவில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது சூர்யாவின் கங்குவா படம். இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யா பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, பாபி தியோல், யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழிகளில் வெளியாகி உள்ள கங்குவா படம் ரசிகர்களை கவரவில்லை. நேற்றைய தினம் படம் ரிலீசான நிலையில், முதல் நாள் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூலாக 22 கோடிகளை இந்த படம் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா: ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சிவா தயாரித்துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய ப்ரமோஷன்களை சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் மேற்கொண்டனர். இந்த படத்தில் ரசிகர்களை கவரும் ஏராளமான அம்சங்கள் இருப்பதாகவும் படம் மிரட்டலாக அமைந்துள்ளதாகவும் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்றும் முன்னதாக ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியொன்றில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உற்சாகம் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்: இந்நிலையில் இந்த படம் 2000 கோடி 3000 கோடி எல்லாம் வசூலிக்க சாத்தியமே இல்லை என்று படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்த படம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை திரையரங்குகளில் ஓடினாலே பெரிய விஷயம் என்றும் அவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். சூர்யா என்றால் பிரேம் டு பிரேம் சிறப்பான காட்சிகள் அமையும் என்ற எதிர்பார்ப்பில் தாங்கள் படத்தை பார்க்க வந்ததாகவும் ஆனால் கங்குவா படம் தங்களை முற்றிலும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யா கதையை முடித்த சிவா: முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்தின் ரிலீசின்போது டிக்கெட் கிடைக்காமல் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானதாகவும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கோட் படத்தின் டிக்கெட் மிகப்பெரிய அளவில் புக் ஆனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் கங்குவா படம் திரையரங்குகளில் காற்று வாங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் கதையை சிவா முடித்து விட்டதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கங்குவா படத்திற்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக மற்ற படங்களில் கமிட் ஆகாமல் ஒரே படத்தில் போகஸ் ஆக நடித்து முடித்துள்ளார் சூர்யா.

6 -7 படங்களை மிஸ் செய்த சூர்யா: இந்த கால நேரத்தில் அவர் ஆறு, ஏழு படங்களில் நடித்திருக்கலாம் என்றும் ஆனால் கங்குவா படத்தின் மீது வைத்த நம்பிக்கை காரணமாக அவர் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் வரையில் மற்ற படங்களில் கமிட்டாகாமல் இருந்தார்.இந்நிலையில் கங்குவா படம் அவரையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சூர்யா 45 படத்திற்காக ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்துள்ளார். இந்த படம் கிராமத்து பின்புலத்தில் மிரட்டலான கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X