Actor Suriya: கங்குவா டீமுடன் இணைந்த அயலான் டீம்.. அட அப்ப சூப்பராத்தான் இருக்கும்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். படம் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் பொங்கலையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யாவை பார்க்க முடிகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முன்னதாக சூர்யா -தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி சிங்கம் படங்களில் இணைந்து மாஸ் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் சூட்டிங் சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. சூர்யாவிற்கு இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஜோடியாகியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று படக்குழு சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த சூட்டிங்: படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியான நிலையில் பொங்கலையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யாவை பார்க்க முடிகிறது.
VFX பணிகள் தீவிரம்: படத்தின் VFX பணிகள் சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயலான் படத்திற்கு VFX பணிகளை மேற்கொண்ட டீம் தற்போது கங்குவா படத்திலும் இணைந்துள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து டீசர், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தங்கலான் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் திரையரங்குகளில் தங்கலான் படத்துடன் இணைந்து கங்குவா படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகமான பட்ஜெட்: கங்குவா படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிகமான பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ரிலீசுக்கு முந்தைய பிசினசில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்தப் படம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிக பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள இந்தப் படம் முன்னதாகவே அதிகமான லாபத்தையும் ஈட்டியுள்ளது சூர்யாவின் கேரியரில் இது முதல்முறை என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











