Suriya Net Worth: ’கங்குவா’ சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே.. சொத்து மட்டும் இத்தனை கோடி இருக்கா?
சென்னை: நடிப்பின் நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் சென்றிருந்த சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸை பரிசாக கொடுத்துள்ளார்.
ஆத்ரேயா, ரோலக்ஸை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கங்குவா ராஜாவாக வில்லத்தனத்தில் 'நலமா' என மிரட்டும் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவின் குடும்பமே சினிமா குடும்பமாக உள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் சம்பாதித்த சொத்து மற்றும் அவரது சொகுசு வாழ்க்கை குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..
48 வயது சிங்கம்: சாக்லேட் பாயாக ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த சூர்யா அயன், சிங்கம் படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டினார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 1,2 மற்றும் 3 படங்கள் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்க இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.
1975ம் ஆண்டு பழம்பெரும் நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்த சூர்யா 1997ம் ஆண்டு விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். காதலே நிம்மதி படத்தில் ஹீரோவாக நடித்த சூர்யா ஆரம்பத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டதும், அதற்காக மோசமான விமர்சனங்களையும் பெற்றார். ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல தொடர்ந்து முட்டி மோதி சினிமாவை கற்றுக் கொள்ள முயற்சி செய்த சூர்யா பாலாவின் நந்தா, பிதாமகன் படங்களில் நடிப்பின் நாயகனாகவே மாறிவிட்டார்.

50 கோடி சம்பளம்: ரஜினிகாந்த், விஜய், அஜித் எல்லாம் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், நடிகர் சூர்யா அதிகபட்சமாக 50 கோடி சம்பளத்தை கங்குவா படத்திற்காக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவுக்கு செலவழிக்கும் ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். 2டி நிறுவனம் தயாரிப்பில் பல படங்களை தயாரித்தும் அதில், மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பும் வழங்கி வரும் சூர்யாவிடம் ஏகப்பட்ட சொத்துக்களும் உள்ளன.

200 கோடி சொத்து: கடந்த ஆண்டு வரை நடிகர் சூர்யாவிடம் 180 கோடி அளவிலான சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 200 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் நடிகர் சூர்யா நிஜமாகவே சூப்பர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்கின்றனர்.
சமீபத்தில், மும்பையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் குடியேறிய சூர்யா அங்கேயும் பல கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்கள்: நடிகர் சூர்யாவிடம் 1.3 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் 730Ld, ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடி Q7, ரூ.60 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ், ரூ.1.1 கோடி மதிப்பிலான ஜாகுவார் XJ L போன்ற கார்களும் உள்ளன.
நடிகர் சூர்யாவுக்கு தேவ் எனும் மகனும் தியா என்கிற மகளும் உள்ளனர். இருவரும் தற்போது மும்பையில் படித்து வருகின்றனர். சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் வேறலெவலில் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்து டிரெண்டாகி வருகின்றன. தமிழ் சினிமாவுக்கு ஒரு பாகுபலியாக கங்குவா அமையுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











