Suriya: சூர்யா 44 படத்துக்கான காத்திருப்பு ஓவர்.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகும் டைட்டில்!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திற்காக ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் அவர் மெனக்கெட்டார். எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தே கங்குவா படம் வெளியான நிலையில் அந்த காலத்தில் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்தாற்போல தற்போது அடுத்தடுத்த படங்களில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார் சூர்யா. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

suriya suriya 44 movie title teaser 44
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த மாதத்தில் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப்படம் வெளியான நிலையில் சொதப்பலான முடிவையே கொடுத்தது. படத்தில் காட்சி அமைப்புகளில் செலுத்திய கவனத்தை கதைக்களத்திலும் திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் படத்தில் கதையே இல்லை என்றும் அடுத்தடுத்த பல விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தது. எதற்கும் துணிந்தவன் படத்தினை தொடர்ந்து ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகாலம் கங்குவா படத்தில் கவனம் செலுத்திவந்தார் சூர்யா.

சூர்யா 44 படம்: இத்தனை மெனக்கெடல்களையும் கங்குவா படத்தின் தோல்வி ஒன்றுமில்லாமல் செய்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வரும்நிலையில், அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறார் சூர்யா. அடுத்ததாக சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப்படம் குறித்த அப்டேட்டை தெரிவித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாகவும் பிரமோஷன்கள் டிசம்பரில் துவங்கும் என்றும் கூறியிருந்தார்.

சூர்யா 44 பட டைட்டில் டீசர்: அதற்கேற்ப தற்போது இந்தப் படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பை தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பரிசாக இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் கதைக்களம் ரொமாண்டிக் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆட்டம் போட்டுள்ள நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்டுக்கு இரு படம்: படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்களும் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். இனி ஆண்டிற்கு இரு படங்களிலாவது நடிப்பேன் என்று முன்னதாக பேட்டியொன்றில் நடிகர் சூர்யா உறுதியளித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டில் அவரது சூர்யா 44 மற்றும் சூர்யா 45 படங்கள் ரிலீசாகவுள்ளன. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 45 படம் ஆக்ஷன் மற்றும் ஆன்மிகத்தை மையமாக கொண்டு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X