Actor Suriya: சூர்யா 45 படத்தில் இணைந்த கங்குவா நடிகர்கள்.. களைகட்டுதே!
சென்னை: நடிகர் சூர்யா, திரிஷா லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ள படம் சூர்யா 45. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு சூட்டிங்கும் துவங்கப்பட்ட நிலையில் நடிகை திரிஷாவும் இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைந்திருந்தார்.
சினிமாவில் திரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவு இந்த சூட்டிங்கின்போது கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். இதன்போது நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் சூர்யா மற்றும் திரிஷா மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தையொட்டி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை இந்தமாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் ரொமாண்டிக் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

சூர்யா -ஆர்ஜே பாலாஜி கூட்டணி: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. அவரது 45வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் பொள்ளாச்சியில் துவங்கப்பட்டுள்ளது. மாசாணியம்மன் கோயிலில் படத்தின் பூஜை சிறப்பாக போடப்பட்ட நிலையில், உடனடியாக படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக படத்தின் சூட்டிங்கில் திரிஷாவும் இணைந்த நிலையில், அவரது 22 ஆண்டுகால சினிமா கேரியரை பாராட்டும்வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் சூர்யா., ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

சூர்யா 45 படத்தில் கங்குவா நடிகர்கள்: இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதனிடையே, லப்பர் பந்து பட நாயகி சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்திருந்த யோகிபாபு மற்றும் நட்ராஜ் ஆகியோரும் சூர்யா 45 படத்தில் தொடர்ந்து பணியாற்றவுள்ளனர்.

சூர்யா 45 பட நடிகர்கள் அறிவிப்பு: இதனிடையே நடிகை ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி ஆகியோரும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தயாரிப்புத்தரப்பு அடுத்தடுத்து அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக சூர்யா 44 படம் ரிலீசாகவுள்ள நிலையில் சூர்யா 45 படமும் அடுத்த ஆண்டிலேயே ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பில் படங்களை இயக்கிவந்த ஆர்ஜே பாலாஜி, சூர்யாவை எப்படிப்பட்ட ஜானரில் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் எப்போதுமே ஒரு அரசியல் நையாண்டி காணப்படும், அதேபோல இந்தப்படமும் அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications