Suriya 45 movie: மாசாணியம்மன் கோயிலில் நடந்த சூர்யா 45 பட பூஜை.. அப்ப அதுதானா?

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி உள்ள நிலையில் சூர்யா 45 படத்தின் பூஜை இன்றைய தினம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ள நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் இந்த படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

இந்த பூஜையில் இதில் பட்டு வேட்டை சட்டை சகிதம் நடிகர் சூர்யா பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நாளைய தினம் துவங்கி தொடர்ந்து நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட மாசாணி அம்மன் படத்தின் கதைக்களத்தில் தான் தற்போது சூர்யா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

suriya suriya 45 movie rj balaji 45


நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி கலவையான விமர்சனங்களையும் சொதப்பலான வரவேற்பு மற்றும் வசூலையும் பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அந்தமானில் அதிகமான நாட்கள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள சூழலில், அடுத்தடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் சூர்யா 44 பட ரிலீஸ்: தற்போது சூர்யா 44 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் துவங்கியுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை துவங்க உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா 45 பட பூஜை: இந்த படத்தின் பூஜை இன்றைய தினம் பொள்ளாச்சியின் மாசாணி அம்மன் கோயிலில் போடப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மெர்சல், பிகில் மற்றும் ஜவான் படங்களில் சிறப்பாக செயல்பட்ட ஜிகே விஷ்ணு இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பூஜைக்காக வேட்டி சட்டையில் சூர்யா பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. படத்தில் திரிஷாவும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட மாசாணி அம்மன் படத்தின் கதைக்களமே சூர்யா 45 படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாசாணி அம்மன் கதைக்களத்தில் சூர்யா?: இதில் மாசாணி அம்மனாக திரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான பாணியில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. நாளைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் துவங்கவுள்ள நிலையில் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் வைத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் மிகச் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்த நிலையில் சூர்யா 45 படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X