Suriya: கருப்பசாமியாக மாறும் சூர்யா.. ஆர்ஜே பாலாஜியின் படத்தோட டைட்டில் இதுதானா?.. இத்தனை ஹீரோயினா?

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்தமாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் அதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. கங்குவா படத்தின் பிரமோஷன்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த மாதத்தில் சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளார்.

suriya suriya 45 movie rj balaji

நடிகர் சூர்யாவின் கங்குவா: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கங்குவா படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். படத்தில் நடிகர் சூர்யா வரலாற்று கெட்டப்பிலும் தற்காலத்திய இளைஞனாகவும் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகியுள்ள நிலையில், அவர் இந்த இரு கெட்டப்பிலும் மிகச் சிறப்பாக காணப்படுகிறார்.

தள்ளிப்போன ரிலீஸ்: இந்த மாதத்திலேயே படம் ரிலீசாகவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்களுடன் இணைந்து சூர்யா, அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். முன்னதாக கங்குவா படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த உடனேயே அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

சூர்யா45 படத்தின் சூட்டிங்: இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல ஆர்ஜே, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஆர்.ஜே பாலாஜி இயக்க கமிட் ஆகியுள்ளார். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கங்குவா படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டுவரும் சூர்யா, இதையடுத்து சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

சூர்யா 45 பட டைட்டில்: இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் அல்லது மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரில் ஒருவர் சூர்யாவிற்கு ஜோடியாகவுள்ளதாகவும் அதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் முக்கியமான கேரக்டரில் காஷ்மிரா பர்தேசி நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் கருப்பு என்று வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X