Suriya 43 movie: சூர்யா 43 படத்தின் டைட்டில் இதுவா.. மிரட்ட தயாராகும் சுதா கொங்கரா & டீம்!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் அவரது போர்ஷன்கள் நிறைவு செய்யப்பட்டு விட்டதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா.

படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கவுள்ள நிலையில் அதற்கான பிட்னசில் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

Actor Suriyas Suriya43 movie to be titled as 1965 it seems

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் சூர்யாவின் போர்ஷன்கள் ஏறக்குறைய நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சில பேட்ச் வேலைகளை மேற்கொண்டுள்ள படக்குழு இந்த மாத இறுதிக்குள் அதையும் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு சூர்யாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

சூர்யா 43 படம்: காயம் சிறிய அளவில்தான் உள்ளது என்றும், இதையொட்டியும் சூர்யா 43 படத்தின் பிட்னசிற்காகவும் தற்போது சூர்யா மும்பையில் உள்ளார். தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பை புறப்பட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சூர்யா 43 படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில் இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைக்க தற்போது அவர் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்தமாதம் சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் இணையவுள்ளனர். படத்தின் சூட்டிங்கில் சூர்யா சற்று தாமதமாக இணைவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு முன்னதாக புறநானூறு என்று தலைப்பிடப்பட்டது. ஆயினும் டைட்டில் அதுவல்ல என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

1965 டைட்டில்: படம் கடந்த 1965ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. படத்தில் சூர்யாவுடன் துல்கர் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 1965ம் ஆண்டில் மொழிப்போரில் உயிர்நீத்த ராஜேந்திரன் என்பவரது புகைப்படமும் சூர்யாவின் புகைப்படமும் ஒரேநேரத்தில் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Actor Suriyas Suriya43 movie to be titled as 1965 it seems

உண்மை சம்பவங்கள்: இந்தப் படத்தின் கதைக்களம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக முன்னதாக சுதா கொங்கரா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். முன்னதாக சூர்யா -சுதா கொங்கரா இணைந்திருந்த சூரரைப் போற்று படத்தின் கதைக்களம் பயோபிக்காக வெளியாகி மாஸ் காட்டியது. தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்நிலையில் இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. முன்னதாக சூரரைப் போற்று படம் பாலிவுட்டிலும் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X