Suriya 43: சூர்யா இல்லாமல் மதுரையில் துவங்கும் சூட்டிங்.. சூர்யா 43 படத்தின் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் சூர்யா -சிவா காம்பினேஷனில் உருவாகிவரும் கங்குவா படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு நடிகர் சூர்யாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தற்போது மும்பையில் ஓய்வில் உள்ளார்.

ஆயினும் படத்தில் சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளதாகவும் சில பேட்ச் வேலைகள் மட்டும் மீதமுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actor Suriyas Surya 43 movie shooting to be starts next month in Madurai

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் அவருக்கு வித்தியாசமான ஜானர்களில் அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் இணைந்திருந்தார் சூர்யா. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் அமைந்தது. ஆனால் சில மாதங்கள் சூட்டிங் நடந்த நிலையில் படம் கைவிடப்பட்டது.

கங்குவா படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து ஒன்றில் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தற்போது மும்பையில் ஓய்வில் உள்ளார். ஆனால் கங்குவா படத்தில் அவரது போர்ஷன்கள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூர்யா 43 படம்: இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 43 படத்திற்காக சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்த மாதம் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியாவும் இணையவுள்ள நிலையில் இவர்கள் மூவரும் கல்லூரி ஸ்டூடண்ட்சாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Suriyas Surya 43 movie shooting to be starts next month in Madurai

கல்லூரி மாணவனாக நடிக்கும் சூர்யா: இந்தப் படத்தில் கல்லூரி ஸ்டூடண்டாக் சூர்யா நடிக்கவுள்ள நிலையில் அதற்காக அவர் தற்போது கடுமையான பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அடுத்த மாதம் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் சிறிது தாமதமாகவே கலந்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் சுதா கொங்கரா கூறியிருந்த நிலையில், படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது.

உணவு கட்டுப்பாட்டில் சூர்யா: தற்போது கங்குவா படத்தில் போர் வீரராக நடித்துள்ளார் சூர்யா. இதன் காரணமாக அவர் தனது உடலை அதிகமாக ஏற்றி மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக புறநானூறு படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில் இந்தப் படத்திற்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பை சென்றுள்ள சூர்யா, அங்கு உணவு கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X