twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசை படத்தில் நடிக்க பயந்த இளைஞர் ஆஸ்கர் வந்த வேகம்..25 ஆண்டுகளில் நடிகர் சூர்யா கண்ட அசுர வளர்ச்சி

    |

    சென்னை : நடிகர் சூர்யா பயந்த சுபாவமுள்ள பைஅயன் இவன் எப்படி வர போகிறானோ என பயந்தேன் ஆனால் அவர்தான் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என சிவகுமார் சொன்னார்.

    சூர்யா 25 ஆண்டுகளுக்கு முன் எதுவும் தெரியாத சாதாரண இளைஞன். இன்று ஆஸ்கர் கமிட்டி அழைக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார்.

    தமிழ் சினிமா தாண்டி சமூக அக்கறையுடன் கல்வி வளர்ச்சிக்கு உழைக்கிறார். சமூக கருத்துகளை துணிந்து தெரிவிக்கிறார்.

    ரூட்டை மாற்றும் நயன்தாரா.. வெற்றியை கொடுக்குமா நயன்தாரா கணக்கு! ரூட்டை மாற்றும் நயன்தாரா.. வெற்றியை கொடுக்குமா நயன்தாரா கணக்கு!

    வருத்தப்பட்ட சிவகுமார், வாட்டம் போக்கிய சூர்யா

    வருத்தப்பட்ட சிவகுமார், வாட்டம் போக்கிய சூர்யா

    பள்ளியில் எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்காத காரணத்தால் வேறு பள்ளிக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று சொன்னதால் மற்றொரு பள்ளியில் சேர்த்த பொழுது அங்கு நான் வரிசையில் நிற்பதை பார்த்து கண் கலங்கி அழுத பிள்ளைதான் சூர்யா. அமைதியான சுபாவம், எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி வளர்ந்த சூர்யா என்ன செய்யப் போகிறாரோ என்ற கவலையில் இருந்தேன், ஆனால் இன்று சாதித்துக் காட்டியுள்ளார்" என்று சமீபத்தில் சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார் மனம் நெகிழ்ந்து பேசினார். இது மேடைக்காக பேசிய பேச்சல்ல.

    அப்பா சாதனையாளர் பிள்ளை?

    அப்பா சாதனையாளர் பிள்ளை?

    நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் ஆகி 25 ஆண்டு காலத்தில் சூர்யா அடைந்த அசுர வளர்ச்சி அவருடைய கடின உழைப்பை காட்டுகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. நடிகர் சிவகுமார் திரை உலகிற்கு வந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி என மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த காலம் மெலிந்த உருவத்துடன் மீசை கூட முளைக்காத சிவக்குமார் என்ன செய்யப் போகிறார் என்று எண்ணிய காலகட்டத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மெல்ல மெல்ல தமிழ் திரை உலகில் கால் பதித்த சிவகுமார் 70, 80-களில் முன்னணி நடிகராக விளங்கினார்.

    நடிக்க மறுத்த சூர்யா அஜித்துக்கு கிடைத்த வாய்ப்பு

    நடிக்க மறுத்த சூர்யா அஜித்துக்கு கிடைத்த வாய்ப்பு

    அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். தன்னைப் போலவே திரைத்துறைக்கு சூர்யா பிள்ளைகள் வருவதை சிவகுமார் ஆதரிக்கவில்லை. ஆனால் காலம் மகன்கள் இருவரையும் திரைத்துறைக்கு கொண்டு வந்து விட்டது. அதிலும் மிகவும் பயந்த சுபாவம் உள்ள சூர்யா திரைக்கு வந்து சாதித்தது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் என்கின்றனர். இயக்குனர் வசந்த் ஆசை திரைப்படத்தை எடுத்த பொழுது அதில் கதாநாயகராக நடிக்க ஒரு இளம் நடிகரை தேடியபோது சூர்யா அவர் கண்ணில் பட்டார். அவரை நடிக்க அழைத்த பொழுது சூர்யா படிப்பில் கவனம் செலுத்துகிறேன் எனக் கூறி மறுத்துவிட்டார். இதனால் சூர்யா மறுத்த வாய்ப்பு நடிகர் அஜித்துக்கு கிடைத்தது.

    அஜித் மறுத்ததால் வந்த வாய்ப்பு

    அஜித் மறுத்ததால் வந்த வாய்ப்பு

    அந்த படம் மிகவும் பேசப்படும் படமாக அஜித்துக்கு அமைந்தது நல்லதொரு வாய்ப்பை அன்று சூர்யா விட்டு விட்டார். ஆனால் வசந்த் சூர்யாவை விடவில்லை, அடுத்து அவர் எடுத்த நேருக்கு நேர் படத்தில் விஜய், அஜித் இருவரையும் நடிக்க வைத்தார். அந்த படத்தில் இருந்து திடீரென அஜித் விலகியதால் அந்த இடத்திற்கு சூர்யாவை கேட்டு நடிக்க வைத்தார். இப்படித்தான் திரைத்துறைக்கு சூர்யா காலடி எடுத்து வைத்தார்.

    நீங்கள் எல்லாம் ஏன் நடிக்க வருகிறீர்கள்? சூர்யாவை கேட்ட ரசிகர்

    நீங்கள் எல்லாம் ஏன் நடிக்க வருகிறீர்கள்? சூர்யாவை கேட்ட ரசிகர்

    சூர்யா வந்த பொழுது நடிகர் விஜய் நடனம், நடிப்பு என மிகுந்த அனுபவம் உள்ள ஒரு நடிகராக இருந்த காலகட்டம். ஆனால் சூர்யாவுக்கு அதுதான் முதல் படம் இந்த படத்தில் நடனம், நடிப்பு அனைத்திலும் சொதப்பினார். படத்தை தியேட்டரில் பார்த்த பொழுது ஒரு ரசிகர் நீங்கள் எல்லாம் எதற்கு நடிக்க வந்து எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்று வெளிப்படையாக சொல்லிச் சென்றதாக சிவகுமார் ஒருமுறை தெரிவித்து இருந்தார்.

    சொதப்பலோ சொதப்பல்

    சொதப்பலோ சொதப்பல்

    நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும்பொழுது, நான் சூர்யாவின் முதல் படமான நேருக்குநேரை பார்த்தேன் அதில் அவருக்கு டான்ஸ் வரவில்லை, பாடி லாங்குவேஜ் சரியில்லை என்று தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு அந்த படத்தில் சூர்யா சொதப்பி இருப்பார். அதற்கு பின்னர் சூர்யா 98 ஆம் ஆண்டில் காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்களில் நடித்தார். பெரிதாக சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் இல்லாத நிலையில் பிரெண்ட்ஸ் படத்தில் மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்தார் இந்த படத்திலும் சூர்யாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. 3 ஆண்டுகள் இப்படியே கழிந்தது.

    நாயகனாக்கிய நந்தா

    நாயகனாக்கிய நந்தா

    இதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு சூர்யாவின் வாழ்க்கையை திருப்பி போட்டவர் இயக்குனர் பாலா எனலாம். பாலா எடுக்க நந்தா படத்தில் சூர்யா நடித்தார். இந்த படத்தில் சூர்யா தன்னுடைய வழக்கமான சார்மிங் பாய் தோற்றத்தை விட்டு முற்றிலும் மாறி ஒரு முரட்டுத்தனமான இளைஞனாக நடித்திருந்தார். படம் முழுவதும் முரட்டுத்தனமாக வரும் சூர்யா கடைசியில் தன் தாயால் விஷம் வைத்து கொல்லப்படுவார். இந்த படம் சூர்யாவுக்கு சூர்யாவுக்குள் இருந்த இன்னொரு நடிகரை வெளி கொண்டு வந்தது. இதன் மூலம் சூர்யாவால் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை சூர்யாவுக்கும் கொடுத்தது, பார்த்த ரசிகர்களுக்கும் கொடுத்தது எனலாம்.

    சார்மிங் பாய் சூர்யா முரடரான மவுனம் பேசியதே

    சார்மிங் பாய் சூர்யா முரடரான மவுனம் பேசியதே

    பின்னர் மீண்டும் ஒரு சார்மிங் பாயாக விக்ரமன் படமான உன்னை நினைத்து படத்தில் நடித்தார். இந்த படமும் சூர்யாவுக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்தது. இதன் பின்னர் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை இயக்குனர் கௌதம் இயக்கத்தில் மௌனம் பேசியதே படத்தில் மீண்டும் ஒரு முரட்டுத்தனமான ஒரு வித்தியாசமான இளைஞராக சூர்யா நடித்தார். இந்த படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது. ஆனால் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சூர்யா பெயர் வாங்கிக் கொடுத்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படம் தான்.

    ரஜினியே வியந்து பாராட்டிய காக்க காக்க

    ரஜினியே வியந்து பாராட்டிய காக்க காக்க

    இந்த படத்தில் முதலில் கமலிடம் கேட்க அவர் மறுத்து விட, அஜித்திடம் கேட்க அவரும் மறுக்க பின்னர் சூர்யாவை இந்த படத்தை நடிக்க வைத்தார் கௌதம் மேனன். அவரது நம்பிக்கையை சூர்யா வீணடிக்கவில்லை. ஒரு ஐபிஎஸ் அதிகாரி எப்படி இருப்பார் என்பதை சூர்யாவின் முரட்டுத்தனமான நடிப்பு இந்த படத்தில் எடுத்து காட்டியது. இது பற்றி ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் "சூர்யாவின் காக்க காக்க படத்தை மாறு வேஷத்தில் சென்று ரசிகர்களுடன் பார்த்தேன், அவருடைய நடிப்பு பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது ஒவ்வொரு ஐபிஎஸ் ஆஃபிசரும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போல் இருந்தது. சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தை நான் பார்த்திருக்கிறேன், டான்ஸ் வராது, பாடி லாங்குவேஜ் சரியில்லை என்று இருந்த சூர்யா இப்போது மிகச் சிறந்த அளவில் தூள் பண்ணுகிறார் வெரி நைஸ்" என்று பாராட்டினார்.

    பிரேக் கொடுத்த பிதாமகன்

    பிரேக் கொடுத்த பிதாமகன்

    போலீஸ் அதிகாரி ஆக கலக்கிய சூர்யா அந்த ஆண்டு மீண்டும் ஒரு வித்தியாசமான அருளில் நடித்து கலக்கினார். அந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தை திருப்புமுனைக்கு உள்ளாக்கிய பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன். இந்த படத்தின் ஹீரோ விக்ரமாக இருந்தாலும் படத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் சூர்யா தான். முற்றிலும் ஒரு புதிய சூர்யாவாக நகைச்சுவையுடன் கூடிய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இந்த படத்திலும் சூர்யாவுக்கு மிக சிறப்பான பெயர் கிடைத்தது. ஆண்டுக்கு ஆண்டு சூர்யா தன்னை சிறந்த நடிகர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வந்தார். சவாலான பாத்திரங்களை ஏற்றுமதி வாடிக்கையானது.

    பான் இந்தியா படம் கஜினி

    பான் இந்தியா படம் கஜினி

    2004 ஆம் ஆண்டு பேரழகன் என்ற படத்தில் நடித்த இரட்டை வேடம், மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, அதற்கு அடுத்த ஆண்டு மாயாவி என்ற நகைச்சுவை படத்தில் நடித்தார், ஆடுத்த ஆண்டு மிகப்பெரிய பான் இந்தியா படமான கஜினி படத்தில் சூர்யா நடித்தார். இந்த படமும் அஜித்திடம் கேட்டு அவர் மறுத்ததால் பின்னர் சூர்யா நடித்தார். இந்த படத்தின் பாடல்கள், இசை, சூர்யாவின் பாத்திரம் என அனைத்தும் மிக சிறப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் வாரணமாயிரம் படத்தில் சூர்யா ஒரு வித்தியாசமான தந்தை மகன் பாத்திரத்தை ஏற்றும் நடித்தார். 2009 ஆம் ஆண்டு அயன் திரைப்படம்,

    சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 சூப்பர் ஹிட் படங்கள்

    சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 சூப்பர் ஹிட் படங்கள்

    2010 ஆம் ஆண்டு சூர்யாவுக்கு மிக முக்கியமான ஆண்டு எனலாம் இயக்குனர் ஹரி விக்ரமுக்காக கதை எழுதிய 'சிங்கம்' படத்தில் விக்ரம் நடிக்க மறுக்க சூர்யா நடித்தார். இந்த படத்தில் துரைசிங்கம் என்கிற காவல் அதிகாரி வேடம் சூர்யாவுக்கு, படம் போகும் வேகத்தை விட சூர்யாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். இந்த படம் சிறப்பாக ஓடியது சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றுக் கொடுத்தது. சிங்கம் படத்தின் வெற்றி காரணமாக சிங்கம் 2, சிங்கம் 3 என வரிசையாக அவரது படங்கள் வெளிவந்தன. இந்த படங்கள் தெலுங்கு மார்க்கெட்டிலும் சூர்யாவுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று கொடுத்தது.

    ஓடிடியை பயன்படுத்திய முதல் பிரபலம் சூர்யா

    ஓடிடியை பயன்படுத்திய முதல் பிரபலம் சூர்யா

    அதன் பின்னர் ஏழாம் அறிவு, மாற்றான் என்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் சூர்யா நடித்தார். அஞ்சான் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பை காட்டியது. கொரோனா காலகட்டத்தில் சூர்யாவின் சொந்த தயாரிப்பில் சூரரை போற்று படம் வெளியானது. இந்த படத்தை திரையரங்கில் வெளிப்பட வெளிப்படுத்த முடியாத நிலையில் முதன்முதலாக ஓடிடியில் சூர்யா படத்தை வெளியிட்டார். இதற்கு பெரும் எதிர்ப்பு வந்த போதிலும் ஓடிடி எனும் நவீன தளத்தை பயன்படுத்தாமல் விடக்கூடாது என்று சூரரைப் போன்று படத்தை ஓடிடியில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது சூர்யாவுக்கு பெயர் பெற்று தந்தது. தற்போது இந்த படம் இந்தியில் எடுக்கப்படுகிறது சூர்யா இதில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

    சூர்யாவின் வாழ்வில் ஒரு மைல் கல் ஜெய்பீம்

    சூர்யாவின் வாழ்வில் ஒரு மைல் கல் ஜெய்பீம்

    சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் பெயர் சொல்லும் படங்கள் பல இருந்தாலும் சமுதாய ரீதியாக சூர்யா எப்படி படங்களை தேர்வு செய்கிறார், அவர் மிகச் சிறந்த நடிகர் என சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் படம் என்றால் ஜெய் பீம் படத்தை சொல்லலாம். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற நிலையில் அதில் சூர்யா நடித்த வக்கீல் பாத்திரம் நிஜ வாழ்க்கையில் நீதிபதி சந்துருவாக நம்முடன் வாழ்ந்து வரும் நிலையில் இந்த படம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. போலீசின் கொடுமையான அடக்கு முறையையும், சாதாரண மக்களுக்கு சட்டம் எட்டாக்கனி என்பதையும், சமூக அக்கறை உள்ள ஒரு வழக்கறிஞர் வாதாடி சட்டத்தின் மூலம் நியாயத்தை எப்படி பெற்று தருகிறார் என்பதை விளக்கும் படம்.

    ஜெய்பீம் படத்துக்கு கிடைத்த அங்கிகாரம்

    ஜெய்பீம் படத்துக்கு கிடைத்த அங்கிகாரம்

    இந்த படத்தின் வசனம், காட்சியமைப்பு, சூர்யாவின் நடிப்பு, மற்றவர்களின் எதார்த்தமான நடிப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. கூடவே சில சர்ச்சைகளும் இருந்தாலும் படத்தை தமிழக மக்கள் பெரிதும் வரவேற்றார்கள். சூர்யா மிகப்பெரிய நடிகர் அவரால் எந்த பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டியது. ஜெய் பீம் படத்தை பார்த்த பொழுது எனது மனதில் அழுத்தம் ஏற்பட்டது, பல மணி நேரம் அந்த அழுத்தம் நீடித்தது என தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடும் அளவிற்கு இந்த படம் சிறப்பாக அமைந்திருந்தது. நடிகர் சூர்யா திரைப்படம் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக பல படங்களை தயாரித்துள்ளார்.

    சூர்யாவின் சமுதாய அக்கறை

    சூர்யாவின் சமுதாய அக்கறை

    ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, ஆஸ்கருக்கு சென்றது சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனலாம். சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமுதாய அக்கறை உள்ள ஒரு கலைஞராகவும் இருந்து வருகிறார். நீட் தேர்வு மாணவர்கள் பாதிப்பு குறித்து அவர் தைரியமாக பேசியது அதன் மூலன் அவர் எதிர்ப்பை சந்தித்தாலும் தனது கருத்தில் வலுவாக நின்றார்.அதேபோன்று படிக்க வசதி இல்லாத ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதற்காக அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற அகரம் என்ற அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெற்றுள்ளனர்.

    சூர்யாவின் கடின உழைப்பும் அசுர வளர்ச்சியும்

    சூர்யாவின் கடின உழைப்பும் அசுர வளர்ச்சியும்

    இது சூர்யாவின் சமுதாய அக்கறைக்கு ஒரு ஒரு எடுத்துக்காட்டு எனலாம். ஒரு பிரபலத்தின் மகனாக இருந்து எதையும் செய்ய முடியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் இருந்த ஒரு இளைஞன் திரைத்துறைக்கு வந்து தன்னுடைய கடின முயற்சியால் தன்னுடைய பலவீனங்களை பலமாக மாற்றி தமிழக திரையுலகில் மிகச்சிறந்த நடிகராக தலையெடுத்துள்ளது பெரிய விஷயம். சூர்யாவின் அசுர வளர்ச்சி சாதாரணமாக வந்ததில்லை.25 ஆண்டு காலம் அவருடைய கடுமையான முயற்சியும், நல்ல பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததும் முக்கிய காரணம் எனலாம்.

    Recommended Video

    Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil
    நடிப்புக்கான அங்கிகாரமே ஆஸ்கர் அழைப்பு

    நடிப்புக்கான அங்கிகாரமே ஆஸ்கர் அழைப்பு

    சூர்யாவின் இந்த வெற்றி இன்று அவரை மிகப் பெரிய உச்சத்துக்கு கொண்டு போய் வைத்துள்ளது. சூர்யாவை ஆஸ்கர் அவார்டு குழு அழைத்துள்ளது அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். தமிழகத்தில் சூர்யாவுடன் நடிக்க வந்த எவ்வளவோ நடிகர்கள் உள்ள நிலையில், தன்னுடைய திறமையால் வளர்ந்துள்ள சூர்யாவுக்கு அவரது நடிப்புக்காக கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே இந்த அழைப்பு எனலாம். இன்னும் சூர்யா பல்வேறு பாத்திரங்களை ஏற்று தன் வாழ்க்கையில் பல நல்ல உயரங்களை அடைவார் என்பது நிச்சயம்.

    English summary
    Surya, a Leading Tamil Actor who was scared when he first got the chance to act in the film Aasai, has made great achievements in the film industry in last 25 years. Now he has progressed to the point of being invited by the Oscar Committee.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X