வாவ், நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது... குட் நியூஸ் சொன்ன சூர்யா!
விரைவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
சென்னை: விரைவில் ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஜோடி சூர்யா - ஜோதிகா தம்பதி தான். இவர்களுக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதற்கு பிறகு மகளிர் மட்டும், காற்றின் மொழி, நாச்சியார் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மூத்த நடிகை ரேவதியுடன் இணைந்து காமெடி படம் ஒன்றில் ஜோதிகா நடித்து வருகிறார். கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க சூர்யாவும் தொடர்ந்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. மேலும் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படமும் சூர்யா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் என்ஜிகே ரிலீசையொட்டி நடிகர் சூர்யா டிவிட்டரில் லைவ் சேட்டிங் செய்தார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ரசிகர் ஒருவர், "மீண்டும் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா?" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சூர்யா, " ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் நடிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். கதை முடிவானது, படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
சூர்யாவின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் நிச்சயம் சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாகத் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications