எப்பவும் நாங்கதான் நம்பர் ஒன்.. மீண்டும் நிரூபித்த மாஸ் ஜோடி.. யார்ன்னு பாருங்க!

சென்னை : நடிகர் சூர்யா சிறப்பான பல படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது சூர்யா41 படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

தொடர்ந்து லோகேஷுடன் இரும்புக்கை மாயாவி, ரவிக்குமாருடன் ஒரு படம், சுதா கொங்கரா, சிவா இயக்கங்களில் படங்கள் என திட்டமிட்டு வருகிறார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. சர்வதேச அளவில் இந்தப் படங்கள் விருதுகளையும் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மீண்டும் பாலாவுடன் கூட்டணி

மீண்டும் பாலாவுடன் கூட்டணி

தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் குமரி மாவட்டத்தில் 34 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் மீனவராக சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங் கோவாவில் துவங்கவுள்ளது.

தயாரிப்பிலும் பிசி

தயாரிப்பிலும் பிசி

இந்நிலையில் தன்னுடைய தயாரிப்புப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் சூர்யா. சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான ஓ மை டாக் படத்தில் அருண் விஜய், விஜய்குமார் மற்றும் அவரது பேரன் என மூன்று தலைமுறையினர் ஒரே படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓடிடியில் வெளியானது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தையும் சூர்யா தயாரித்து வருகிறார். இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பிலும் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.

Recommended Video

தமிழ்நாடுல பெரிய 5 நடிகர்ல ஒருத்தர் சிவா |SJ Surya Speech | Don Success Meet *Kollywood | Filmibeat
எவர்கிரீன் பேவரிட் ஜோடி

எவர்கிரீன் பேவரிட் ஜோடி

தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நடத்தி வருகிறார் சூர்யா. அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் விருமன் படமும் சூர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ளது. இதனிடையே சூர்யா -ஜோதிகா ஜோடி எப்போதுமே ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக உள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ஜோடி

இவர்கள் இருவரும் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதில்லை. ஆனால் முக்கியமான நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்துக் கொள்ளும்போது இவர்களது ரசிகர்கள் இவர்களை கொண்டாட தவறுவதில்லை. அதுபோலதான் தற்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர்களது புகைப்படம் வைரலாகியுள்ளது. இதையொட்டி பழைய வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X