திடீரென மும்பைக்கு விசிட் அடித்த சூர்யா -ஜோதிகா... என்ன காரணம்?

மும்பை : நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாவது கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் தொடர்ந்து 34 நாட்கள் நடைபெற்றது. இதில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார் சூர்யா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த மாஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மூன்று படங்களும் அவரது மூன்று வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியது. மூன்று படங்களுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக அமைந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இதில் முதல் இரண்டு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் 3 ஆண்டுகள் கழித்து திரையரங்கில் வெளியான சூர்யாவின் படமாக அமைந்தது. படத்தில் பிரியங்கா மோகன் சூர்யாவிற்கு ஜோடியாகி இருந்தார். நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்திருந்தது.

சூர்யா -பாலா கூட்டணி

சூர்யா -பாலா கூட்டணி

இதையடுத்து தற்போது இயக்குநர் பாலா கூட்டணியில் நடித்து வருகிறார் சூர்யா. இது அவரது 41வது படம். 18 ஆண்டுகள் கழித்து பாலாவுடன் சூர்யா இந்தப் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் 34 நாட்கள் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

2வது கட்ட சூட்டிங்

2வது கட்ட சூட்டிங்

இதையடுத்து அடுத்த மாதத்தில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் மதுரையிலும் தொடர்ந்து கோவாவிலும் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் முன்னதாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சூர்யா -ஜோதிகா மும்பை விசிட்

சூர்யா -ஜோதிகா மும்பை விசிட்

இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா திடீரென மும்பைக்கு விசிட் செய்துள்ளனர். அவரது தயாரிப்பில் இந்தியில் சூரரைப் போற்று படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா மதன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

கடந்த மாதத்தில் மும்பைக்கு திடீரென சென்றார் சூர்யா. அதன் விமானநிலைய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகின. அப்போது இந்தப் படத்தின் பூஜையையொட்டி மும்பை சென்ற தகவல் பின்னர் வெளியானது. அதேபோல தற்போதும் அந்தப் படத்தின் சூட்டிங்கை கண்காணிக்க சூர்யா -ஜோதிகா சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த சூரரைப் போற்று படம் அவரது சிறப்பான படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் இந்தியிலும் உருவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X