அருண் விஜய் பையனுக்கு வாழ்த்து சொன்ன சூர்யா -ஜோதிகா... எதுக்குன்னு பாருங்க!
சென்னை :நடிகர் அருண் விஜய் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் விரைவில் யானை படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே தன்னுடைய மகனுடன் இணைந்து அவர் நடித்துள்ள ஓ மை டாக் படம் வரும் 21ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளது.

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சிறப்பான படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக யானை படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.

ஓ மை டாக் படம்
இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்யுடன் இணைந்து அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் படம் வரும் 21ம் தேதி நேரடியாக ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீசாகவுள்ளது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மகனுடன் நடித்துள்ள அருண் விஜய்
படத்தில் ஆர்ணவ், அருண் விஜய்யுடன் அவரது தந்தை விஜயகுமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். படம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா -ஜோதிகா வாழ்த்து
இதனிடையே ஆர்ணவிற்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களுடன் இந்த வீடியோவில் காணப்படுகின்றனர். ஓ மை டாக் படத்தில் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தயாரிப்பு
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அவரது நடிப்பில் ஜெய்பீம் உள்ளிட்ட சிறப்பான படங்களும் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் நேரடியாக திரையரங்குகளில் வெளியிடாமல் தொடர்ந்து அவர் ஓடிடியில் தனது தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











