Surya :திடீரென உடல் எடையை கூட்டிய சூர்யா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

வரலாற்று பின்னணியுடன் இயக்கப்பட்டுவரும் கங்குவா படத்தின் சூட்டிங், கோவை, கொடைக்கானல் சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வரலாற்று பின்னணியிலான பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

உடல் எடையை கூட்டிய சூர்யா : நடிகர் சூர்யா, அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் தன்னுடைய படங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் இவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படம் கமர்ஷியலாக கைக்கொடுத்த நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டியது.

Actor Surya bulked up for Kanguva movie periodic portions

இந்தப் படங்களை தொடர்ந்து சூர்யாவின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது. கோவா, கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சூட்டிங், அடர்ந்த காடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூட்டிங், படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா, பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் இடைவெளியில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பட்டானி மற்றும் மிர்ணாள் தாக்கூர் போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா, தற்போது தன்னுடைய உடலை கணிசமாக ஏற்றியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது உடல் எடையை கூட்டியுள்ளது வெளிப்பட்டுள்ளது. கொடைக்கானலில் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தன்னுடைய மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்களுடன் அவர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடுமையான சூட்டிங்கிற்கு இடையிலும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சூர்யா நேரம் ஒதுக்கி வருகிறார்.

எப்போதும் தன்னுடைய படத்திற்காக தேவையான அளவில் உடல் எடையை ஏற்றுவது மற்றும் இறக்குவதை மிகவும் கவனமுடன் செய்வார் சூர்யா. அதையே இந்தப் படத்திலும் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் வரலாற்று பின்னணியில் அவருக்கு அதிகமான கேரக்டர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்தப் படத்திற்காகவும் சூர்யா அதிகமான மெனக்கெடல்களை செய்துவரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X