அதிரடி காட்டும் சூர்யா... மும்பையில் அடுத்தடுத்து பல கோடி செலவில் அப்பார்ட்மெண்ட்... என்ன காரணம்?

மும்பை: சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார் சூர்யா.

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் மும்பை சென்ற சூர்யா, அங்கு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பல கோடி மதிப்பில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் சூர்யா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ட்ராப் ஆன வணங்கான்

ட்ராப் ஆன வணங்கான்

சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார் சூர்யா. அதேபோல், தசெ ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திலும் சூர்யாவின் நடிப்பு பலரது பாராட்டுகளைப் பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. முன்னதாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆனது.

 மும்பையில் சூர்யா

மும்பையில் சூர்யா

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் மட்டுமே 500 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போதெல்லாம் சூர்யா அடிக்கடி மும்பையில் ரவுண்டு அடித்து வருகிறார். சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் ஜோடியாக வலம் வருவது அடிக்கடி ட்ரெண்டாகி வருகிறது.

 பல கோடி மதிப்பில் வீடு

பல கோடி மதிப்பில் வீடு

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்பில் சூர்யா வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த பிரம்மாண்ட வீட்டில் மனைவி ஜோதிகா, மகன், மகள் ஆகியோருடன் செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகரில் சுமார் 50 கோடி செலவில் வீடு கட்டியிருந்தார் சூர்யா. அதனால், மும்பையில் ஏன் சூர்யா வீடு வாங்கினார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.

 புதிய அப்பார்ட்மெண்ட்

புதிய அப்பார்ட்மெண்ட்

சூர்யா மும்பையில் வீடு வாங்கிய அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியுள்ளாராம் சூர்யா. சுமார் 68 கோடி மதிப்பில் வாங்கியுள்ள இந்த பிளாட், ஒன்பது ஆயிரம் சதுர அடி வரை இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரிய கார்டன், பல கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளுடன் இந்த பிளாட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

 இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

இந்த ப்ளாட் குழந்தைகளின் பர்த்டே பார்ட்டி, விசேஷங்கள் என செலிப்ரேஷனுக்காகவே வாங்கப்பட்டுள்ளதாம். சூர்யா அடுத்தடுத்து மும்பையில் சொத்துகள் வாங்கி குவிப்பது அவரது அப்பா சிவகுமாருக்கு உடன்பாடில்லை என்றே செய்திகள் வெளியாகி வருகின்றன. மும்பையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த ஜோதிகா, முன்னணி நடிகையாக மாறி இறுதியாக சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். சொந்த ஊரை பிரிந்திருக்க முடியாமல் ஜோதிகா தான் மும்பையில் சொத்துகளை வாங்கி வருகிறாரா என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X