உருக்கமாக பேசிய மாணவி.. அமைச்சர் முன்னிலையில் மேடையிலேயே கதறி அழுத நடிகர்.. வைரலாகும் வீடியோ!

Recommended Video

Surya Emotional Moment | Agaram Foundation Book Launch

சென்னை: மாணவி ஒருவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு நடிகர் சூர்யா மேடையிலேயே உடைந்து அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. மூத்த நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாத்திரங்களை தேர்வு செய்து ஜெனியூனாக நடித்து வருகிறார்.

நலப்பணிகள்

நலப்பணிகள்

சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடிப்பதை தாண்டியும் விவசாயிகளுக்கு உதவிகளை செய்வது, அவர்களின் கடன்களை அடைப்பது என சமூகம் சார்ந்த நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

புதியக் கல்விக்கொள்ளை

புதியக் கல்விக்கொள்ளை

அதோடு தாங்கள் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் மூலம், படிக்க வசதியில்லாத மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகின்றனர். அண்மையில் புதியக் கல்வி கொள்கைக்கு எதிரான அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

நூல் வெளியிட்டு விழா

நூல் வெளியிட்டு விழா

இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் வித்தியாசம் தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

மாணவியின் பேச்சு

மாணவியின் பேச்சு

இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அகரம் அறக்கட்டளை மாணவி ஒருவர் தான் பட்ட கஷ்டங்களை மிகவும் உருக்கமாக மேடையில் பகிர்ந்தார்.

தந்தை மரணம்

தந்தை மரணம்

கிணறு வெட்டும் கூலி தொழிலாளியின் மகளான அந்த மாணவி தனது குடும்பமும் தானும் சந்தித்த துயரங்களையும் தனது தந்தை ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்ததையும் எதார்த்தமாக கூறினார்.

இங்கிலிஷ் தெரியாது

இங்கிலிஷ் தெரியாது

தனது கனவு நனவாக தனக்கு கைக்கொடுத்தது அகரம் தான் என்ற அவர், தனக்கு இங்கிலிஷ் தெரியாது.. கிராமத்தில் இருந்து வந்த தனக்கு எப்படி டிரஸ் பண்ணிக்கணும்னு தெரியாது.. பல சமயம் கூச்சத்தோடு ஒதுங்கியிருந்ததாகவும் என்னை நிறைய பேர் ஏளனமா பார்த்தார்கள் என்றும் தான் பட்ட கஷ்டங்களை மிக சாதாரணமாக கூறினார் அந்த மாணவி.

காரணம் அகரம்

காரணம் அகரம்

அப்போதுதான் துணிச்சலாக பிஏ இங்கிலீஷ் படித்து தற்போது ஒரு நல்ல வேலையில் இருப்பதாகவும் கூறிய அவர் அதுக்கு காரணம் அகரம் என்று கூறி கலங்க வைத்தார்.

மேடையில் அழுத சூர்யா

நடிகர் சூர்யா கண்களில் நீர் ததும்பி கலங்கியப்படியே அந்த மாணவியின் பேச்சு முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அழுகையை கட்டுப்படுத்த முடியாத நடிகர் சூர்யா, அழுதப்படியே அந்த மாணவியின் அருகில் சென்று அன்போடு அணைத்தார்.

பலரையும் கலங்க செய்தது

பலரையும் கலங்க செய்தது

பின்னர் மாணவியை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார் சூர்யா இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பலரையும் கலங்க செய்தது. மாணவியின் சோகப் பேச்சைக்கேட்டு நடிகர் சூர்யா அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கைமாறு செய்யவே அகரம்

தொடர்ந்து பேசிய சூர்யா, படிக்க வேண்டிய வயதில் ஒழுங்காக படிக்காததால் பல இடங்களில் கூச்சத்துடன் ஒதுங்கியிருந்ததாக கூறினார். மேலும் எந்த தகுதியும் இல்லாத தன்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு கைமாறு செய்யவே அகரம் அறக்கட்டளையை நடத்துவதாகவும் உருக்கமாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X