Kalaignar 100 event: கலைஞர் முதலில் படைப்பாளி.. கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூர்யா!

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதிக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், வடிவேலு உள்ளிட்ட பிரலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் நடிகர்கள் ஒவ்வொருவராக மேடையேறி கலைஞர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டனர். அவர் கலைத்துறையிலும், அரசியலிலும் செய்த பல்வேறு விஷயங்கள் குறித்து பாராட்டி பேசினர்.

தமிழ் திரையுலகில் தன்னுடைய வசனத்தால் மக்களை அதிகமாக சிந்திக்க வைத்தவர் மு கருணாநிதி. தன்னுடைய படங்களின் வசனங்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்ட இவர், தமிழக முதலமைச்சராகவும் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். இவரது நூற்றாண்டு விழாவை தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து நடத்தி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர்.

Actor Surya, Dhanush hails former CM late M Karunanidhi on Kalaignar 100 event

கலைஞர் 100 நிகழ்ச்சி: தமிழ் சினிமாவில் தன்னடைய வசனங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அவர்களை சிந்திக்கவும் வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி. முதல்வராகவும் தமிழகத்தில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் கருணாநிதி. கலைஞர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கருணாநிதிக்கு இன்றைய தினம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகமே குவிந்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்தி சிவக்குமார் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள்: நிகழ்ச்சியில் ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர்கள் தனுஷ், சூர்யா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் மேடையேறி கலைஞர் குறித்த தங்களது நினைவுகளையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சூர்யா, சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற ட்ரெண்டை செட் செய்தவர் கலைஞர் என்று தெரிவித்துள்ளார். அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என பல தரப்பினருக்கும் பல நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கலைஞர் குறித்து சூர்யா சிலிர்ப்பு: அரசியலில் பல மாற்றங்களை கலைஞர் கொண்டுவந்த போதிலும் சினிமாவையும் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளதையும் சூர்யா சுட்டிக் காட்டினார். இதனாலேயே அவரை மரியாதையாக, ஆசையாக ரசிகர்கள் கலைஞர் என்று அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். முதலில் அவர் படைப்பாளி என்றும் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முக்கியமான நிகழ்ச்சியாக தான் பார்ப்பதாகவும் சூர்யா குறிப்பிட்டார். கலைஞருக்கு அவரது எழுதுகோலுக்கும் தன்னுடைய மரியாதையை செலுத்துவதாகவும் இந்த விழாவில் தானும் பங்கேற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

கலைஞர் நம்முடன்தான் இருக்கிறார்: மேலும் கலைஞரை நேரில் பார்த்துள்ளதையும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருப்பதையும் நினைவுகூர்ந்த சூர்யா, அதுகுறித்து மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், முக ஸ்டாலின், உதயநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டார். தொடர்ந்து கலைஞர் நம்முடன்தான் தற்போதும் இருப்பதாகவே தனக்கு தோன்றுவதாகவும் தனுஷ் குறிப்பிட்டார். கலைஞரின் வாக்கியங்களை மேற்கோள் காட்டி பேசிய தனுஷ், நாமாக வாழ்வோம், நலமாக வாழ்வோம் என்று தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X