கோவாவில் துவங்கிய சூர்யா 42 பட சூட்டிங்.. பாலிவுட் நாயகி திஷா பட்டானி பங்கேற்பு!

கோவா : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் 2வது கட்ட சூட்டிங் தற்போது கோவாவில் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் தேசிய விருதுகளையும் அள்ளியது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் பாண்டிராஜ் இயக்கத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தது. இந்தப் படத்தில் சமூக வன்முறைக்கு எதிராக செயல்பட்ட சூர்யா, தனது அடுத்தப்படத்திலேயே போதைக் கடத்தல் மன்னனாக நடித்து மிரட்டினார்.

போதைக் கடத்தல் மன்னன்

போதைக் கடத்தல் மன்னன்

கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர் அவர் இதுவரை ஏற்று நடித்திராத கேரக்டராக வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக அடுத்ததாக விக்ரம் 3 படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் விக்ரம் 3 படம்

விரைவில் விக்ரம் 3 படம்

தற்போது தளபதி 67 படத்தில் விரைவில் இணையவுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்தப் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்தியின் கைதி 2 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே விக்ரம் 3 படத்தை அவர் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா 42 படத்தின் சூட்டிங்

சூர்யா 42 படத்தின் சூட்டிங்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துவந்த சூர்யா, தற்போது அந்தப் படத்தை நிறுத்திவிட்டு சூர்யா 42 படத்தில் இயக்குநர் சிவா டைரக்ஷனில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

தொடர்ந்து இன்றைய தினம் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் துவங்கியுள்ளது. வரலாற்றுப் பின்னணியுடன் இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் 5 வரலாற்று கேரக்டர்கள் குறிப்பிடப்பட்டன. இந்த கேரக்டர்களில் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

சூட்டிங்கில் கலந்துகொண்ட திஷா பட்டானி

சூட்டிங்கில் கலந்துகொண்ட திஷா பட்டானி

இந்தப் படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பட்டானி ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் கோவாவில் இன்று துவங்கியுள்ள சூட்டிங்கில் சூர்யாவுடன் திஷா பட்டானியும் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்காக கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X