வாடி வாசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் சூர்யாவும் இயக்குநர் வெற்றிமாறனும் முதல் முறையாக இணையவுள்ள படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் முதல் முறையாக சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்திற்கு வாடிவாசல் என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

டபுள் ஆக்ஷன்
லாக்டவுனுக்கு பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அப்பா மகன் என டபுள் ஆக்ஷனில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி
நடிகர் சூர்யா ஏற்கனவே வாரணம் ஆயிரம், 24 ஆகிய படங்களில் அப்பா மகன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பா இறந்துவிடுவார்
மேலும் காளையை அடக்க முயற்சிக்கும் போது அப்பா கேரக்டர் இறந்துவிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்பா கதாப்பாத்திரத்திற்காக ராஜ்கிரண் மற்றும் சத்யாராஜ் ஆகியோரை போடலாம் என பேசப்பட்ட நிலையில் சூர்யாவே அந்த கதாப்பாத்திரத்தை செய்யவுள்ளார் என தெரிகிறது.

பெரும் எதிர்பார்ப்பு
நடிகர் சூரியாவும் இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு படத்திற்காக இணைவது இதுவே முதல் முறையாகும், இது கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கிய, தான் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் சூரரைப்போற்று படத்திற்காக காத்திருக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











