Surya :கொடைக்கானலில் சுற்றுலா கொண்டாட்டத்தில் சூர்யா.. யாரோட தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக படத்தின் சூட்டிங் கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Actor Surya enjoys vacation trip in Kodaikanal with his wife Jyothika

கொடைக்கானல் சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் சூர்யா -ஜோதிகா : நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக கொடைக்கானலில் அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமங்களுக்கிடையில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடைக்கானல் சூட்டிங் மிகவும் சிறப்பாக வந்துள்ளதால் சூர்யா மிகவும் குஷியாகியுள்ளாராம். இதையடுத்து படக்குழுவினருக்கு அவர் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதையடுத்து கொடைக்கானலில் இருந்து படக்குழுவினர் தற்போது சூட்டிங்கை முடித்துக் கொண்டு கிளம்பியுள்ளனர். விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் கொடைக்கானலை விட்டு கிளம்பினாலும் நடிகர் சூர்யா அங்கேயே டேரோ போட்டுள்ளார்.

இந்த கொடைக்கானல் சூட்டிங்கின் துவக்கத்திலிருந்தே ஜோதிகா, சூர்யாவுடன் தான் இருக்கிறார். சூட்டிங்கின் இடையில் கிடைக்கும் கேப்பில் இவர்கள் கொடைக்கானலின் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது கோடைக் கொண்டாட்டமாக அதிகமான மக்கள் சுற்றுலா வந்துள்ள நிலையில், அவர்கள் கண்களில் படாமல் இவர்கள் கொடைக்கானலில் அதிகமான இடங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இதையொட்டி புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

Actor Surya enjoys vacation trip in Kodaikanal with his wife Jyothika

இந்தப் புகைப்படத்தில் சற்றே உடலை ஏற்றிய சூர்யாவை பார்க்க முடிந்தது. இது பிளாஷ்பேக் காட்சிக்கான உடல் ஏற்றமாக பார்க்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தில் ஜோதிகாவும் காணப்பட்டார். அவர் வழக்கம்போல அதே கெட்டப்பில்தான் காணப்பட்டார். இந்தப் படத்திற்காக ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் சூர்யாவின் புகைப்படமும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் 500 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய படங்களை போல இல்லாமல் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே கல்லா கட்டியுள்ளது. இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டு வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அதிகமான கவனத்தை ஈர்த்த நிலையில், டைட்டிலும் வித்தியாசமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X