அஜித் வழியை பின்பற்றும் சூர்யா.. எந்த விஷயத்துல தெரியுமா.. பாக்கலாம் வாங்க!
சென்னை :நடிகர் சூர்யா கோலிவுட்டின் சூப்பர் நடிகராக மாறியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் வெளியாகி வருகின்றன.
அவர் கேமியோ ரோலில் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார்.
தற்போது பாலாவின் இயக்கத்தில் சூர்யா 41 படத்திலும் நடித்து வருகிறார். இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் நடைபெறவுள்ளது.

நேருக்கு நேர் சூர்யா
நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தில் அப்பாவியாக குழந்தை போன்ற முகத்துடன்தான் கோலிவுட்டில் அறிமுகமானார். இவரெல்லாம் எப்படி சினிமாவில் நீடிக்கப் போகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு மோசமாக விமர்சிக்கப்பட்டது.

பதிலடியாக சிறப்பான நடிப்பு
தொடர்ந்து அவர் நந்தா, பிதாமகன் போன்ற பாலாவின் படம், மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இத்தனை ஆண்டு காலங்களில் தன்னை சிறப்பாக மெருகேற்றியுள்ளார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பையே பதிலடியாக கொடுத்து வருகிறார்.

விக்ரம் படத்தில் சூர்யா
இதற்கு சமீபத்திய உதாரணமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. க்ளைமாக்சில் சில நிமிடங்களே வந்தாலும் மற்றவர்களை தூக்கி சாப்பிடும் வகையில் இவரது நடிப்பு அமைந்திருந்தது. இவரது கேரக்டர் மாடுலேஷன்கள் மற்றும் வெறித்தனமான பாடி லேங்க்வேஜ் உள்ளிட்டவையும் ரசிகர்களை கட்டிப் போட்டது.

பொத்தி வைத்த விஷயம்
படத்தின் சில நாட்களுக்கு முன்பே படத்தில் சூர்யா நடித்துள்ளது குறித்த ஆடியோ வெளியானது. இதையடுத்தே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். பொத்தி பொத்தி வைத்த விஷயம் வெளியாகிவிட்டது என்றும் கூறியிருந்தார்.

சர்ப்ரைசான கேரக்டர்
இந்த விஷயம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி மொத்தத்தில் அனைவருக்கும் சர்ப்ரைசாகவே இருந்தது. தொடர்ந்து விக்ரம் 3 படத்தில் சூர்யாவே லீட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் கார்த்தி இணையவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

சூர்யா 41 படம்
இதனிடையே சூர்யா 41 படத்தில் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் அவர் மீனவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் 34 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. அடுத்தக்கட்ட சூட்டிங் கோவாவில் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்தி ரீமேக்
இந்நிலையில் இந்தியில் சூரரைப் போற்று படத்தை அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அவரை அடிக்கடி மும்பையில் பார்க்க முடிகிறது. தனியாகவும் குடும்பத்தினருடனும் அவர் மும்பை சென்று வருகிறார்.

கார்த்தியின் விருமன்
இதனிடையே தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் கார்த்தியின் விருமன் படத்தையும் தயாரித்துள்ளார் சூர்யா. இதனிடையே தற்போது அவரது புதிய லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஜோதிகாவுடன் வெளியில் சென்றபோது ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்
அந்த புகைப்படத்தில் அவரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காண முடிகிறது. எப்போதும் இளமையான தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கும் சூர்யா, தற்போது அஜித் பாணியை பின்பற்றுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் ஜோதிகா இந்த புகைப்படத்தில் சிறப்பாக காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











